Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடிக்கு சீராக குடிநீர் விநியோகிக்க வல்லநாட்டில் ரூ.50 லட்சத்தில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

Print PDF

தினகரன் 22.07.2010

தூத்துக்குடிக்கு சீராக குடிநீர் விநியோகிக்க வல்லநாட்டில் ரூ.50 லட்சத்தில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி, ஜூலை 22: தூத்துக்குடி நகருக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்திற் காக ரூ.50 லட்சம் மதிப்பில் வல்லநாட்டில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத் தார்.

தூத்துக்குடி நகருக்கு வல்லநாடு நீர்த்தேக்கத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் 3வதாக அமைக்கப்பட்ட நீர்த்தேக்கத்தில் இருந்து பிரதான குழாய்கள் வழியாக நேரடியாகவே குடிநீர் தூத்துக்குடிக்கு கொண்டு வரப் படுகிறது. ஆனால் மின்சாரம் தடைபட்டால் குடிநீரேற்றம் செய்யும் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் வல்ல நாடு பகுதியில் ரூ.50 லட்சம் செலவில் பத்து லட்சம் லிட் டர் கொள்ளளவு கொண்ட புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழாவுக்கு மேயர் கஸ்தூரி தங்கம் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் கீதாஜீவன் புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட் டியை திறந்து வைத் தார். துறைமுக பொறுப்பு கழக உறுப்பினர் பெரியசாமி, மாநகராட்சி பொறியாளர் ராஜகோபால், மாவட்ட துணை செயலாளர் அருணா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர செய லாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் கனகராஜ் ஆனந்தராஜ் கலந்து கொண் டனர்.