Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கம்பம் நகருக்கு புதிய குடிநீர் திட்டப்பணிகள் துவக்கம்

Print PDF

தினகரன் 28.07.2010ச்

கம்பம் நகருக்கு புதிய குடிநீர் திட்டப்பணிகள் துவக்கம்

கம்பம், ஜூலை 28: கம்பம் நகரில் அடுத்த 30 ஆண்டு மக்கள் தொகைக்கு தேவை யான 12.80 எம்எல்டி குடிநீருக்காக புதிய குடிநீர் திட்டத்தை துவக்கி உள்ளதாக நகராட்சித் தலைவர் அம்பிகாபாண்டியன் கூறினார்.

கடந்த 1960ம் ஆண்டு கம்பம் நகராட்சி மக்கள் தொகை 35 ஆயிரம் பேருக்கு 1.5 எம்எல்டி குடிநீர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. 1990ம் ஆண்டு மக்கள் தொகை 48 ஆயிரம் பேருக்கு கூடுதலாக 3 எம்எல்டி தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. தற் போதைய மக்கள் தொகை 85 ஆயிரம் பேருக்கு 6.10 எம்எல்டி குடிநீர் வழங்கப்படுகிறது.

தற்போது வழங்கப்படும் தண்ணீர் கம்பம் நகர் மக்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே நகரின் பல பகுதிகளில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. நகரின் குடிநீர் பிரச்னையை போக்க கம்பம் நகராட்சிக்கு புதிய குடிநீர் மேம்பாட்டு திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.4 கோடியில் துவங்கப்பட்டது. தொடர்ந்து செயல்படும் இத்திட்டத்தை ரூ.16.21 கோடியில் மேலும் விரிவுபடுத்த நகராட்சி நிர்வாக தலைமைப் பொறியாளர், மண்டல செயற்பொறியாளர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பொறியாளர்களுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பட்டது.

இந்த புதிய குடிநீர் திட்டத்திற்கு உத்தேச மதிப்பீடு தயார் செய்வது தொடர்பாக சிறப்பு கூட்டம் நடந்தது. கம்பம் நகராட்சித் தலைவர் அம்பிகாபாண்டியன் தலைமை வகித்தார். ஆணையாளர் அய்யப்பன், இன்ஜினியர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனி குடிநீர் திட்டமாக செயல்படுத்த, நகராட்சி நிர்வாகமே பராமரிக்கும் வகையில் திட்ட மதிப்பீடு தயாரிக்கவும், தேவையானநிதியை அரசிடம் இருந்து மானியம் அல்லது கடன் பெறுவதும், தற்போதுள்ள பழைய கூட்டு குடிநீர் திட்டத்தை ஏதாவது ஒரு ஊராட்சிக்கு சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் பரித்துரையின் பேரில் மாற்றி கொடுக்கவும் கவுன்சிலர்கள் அனுமதி அளித்தனர்.

நகராட்சித் தலைவர் அம்பிகாபாண்டியன் கூறுகையில், 1397969521 கம்பம் நகரில் 2040 ஆண்டு மக்கள் தொகைக்கு தேவையான 12.80 எம்எல்டி குடிநீருக்காக நகராட்சி நிர்வாகம் தனியாக நிர்வாகிக்கும் புதிய குடிநீர் திட்ட பணியை துவக்கியுள்ளது. இத்தனி குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு விரைவில் அனுமதி அளித்து கம்பம் நகர் மக்களின் குடிநீர் பிரச்சனையை போக்கும்என்றார். .