Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு புனேயில் குடிநீர் வெட்டு பாதியாக குறைப்பு

Print PDF

தினகரன் 28.07.2010ச்

ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு புனேயில் குடிநீர் வெட்டு பாதியாக குறைப்பு

புனே,ஜூலை 28: புனேயில் குடிநீர் வெட்டு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. புனேயில் பருவமழை சரியாக பெய்யாத காரணத் தால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் மட் டம் மிகவும் குறைவாக இருந்தது. இதனால் நிலைமையை சமாளிக்க 40 சதவீத குடிநீர் வெட்டை மாநகராட்சி நிர்வாகம் அமல்படுத்தி வந்தது.

இதனால் நகரில் ஒருநாள் விட்டு ஒரு நாள் மட்டுமே நான்கு மணி நேரம் மட்டுமே குடிநீர் வழங்கபட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிரச்னைப் பற்றி தொடர்ந்து புகார் தெரி வித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது. இதனால் குடிநீர் வழங்கும் அணைகளில் தண்ணீர் மட்டம் ஓரளவு அதிகரித்துள்ளது. இதையடுத்து மாநில நீர்ப் பாசனத்துறை, புனே குடிநீர் தேவைக்கு வழங்கும் தண்ணீரின் அளவை அதி கரித்துள்ளது.

இதையடுத்து குடிநீர் வெட்டையும் மாநகராட்சி நிர்வாகம் குறைத்துள்ளது. இதன் படி தினமும் நான்கு மணி நேரம் குடிநீர் வழங்கப்படும். அதாவது தற்போது ஒருநாள் விட்டு ஒருநாள் நான்கு மணி நேரம் குடிநீர் வழங்கப்படுகிறது. இது இனி தினமும் நான்கு மணி நேரமாக அதி கரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 சதவீத குடிநீர் வெட்டு 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சரும் புனே மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அஜித் பவாரின் உத்தரவின்பேரி லேயே குடிநீர் வெட்டு குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். அதேசமயம் குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய அளவு குடிநீர் இல்லாத பட்சத்தில் மீண்டும் குடிநீர் வெட்டு அதிகரிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.