Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பற்றாக்குறை தீர்க்க நடவடிக்கை கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Print PDF

தினகரன் 29.07.2010

குடிநீர் பற்றாக்குறை தீர்க்க நடவடிக்கை கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, ஜூலை 29: திருத்துறைப்பூண்டி நகராட்சி கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி செல்வராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

துணை தலைவர் பாண் டியன், ஆணையர் திருமலைவாசன், மேலாளர் கிளமன்ட் அந்தோணிராஜ், பணி மேற்பார்வையாளர் பாஸ்கர், துப்புரவு ஆய்வா ளர் ராமச்சந்திரன், கணக்கர் மீரா மன்சூர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கவுன்சிலர் எழிலரசன் பேசுகையில், நகராட்சிக்கு 9வது வார்டிலிருந்துதான் அதிகமாக வரி செலுத்தப்படுகிறது. ஆனால் பொதுநிதிலிருந்து பணிகள் செய்து கொடுப்பதில்லை என்றார்.

கவுன்சிலர் செல்வகுமார் பேசுகையில், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் 1 மணிநேரம் கூட வருவதில்லை என்றார்.

ஆணையர் திருமலைவாசன் பேசுகையில், நகரில் உள்ள 24 வார்டுகளுக்கும் தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. எந்த வார்டுக்கும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு தண் ணீர் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

கவுன்சிலர் ஜிம்மாபானு பேசுகையில், கோட்டகம் பகுதிக்கு குடிநீர் வருவதில்லை. கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

கவுன்சிலர் ரேவதி பேசுகையில், கச்சவராயன்திடல் பகுதிக்கு கொள்ளிடம் தண்ணீர் சரியாக வருவதில்லை என்றார்.

சண்முகசுந்தர் பேசுகை யில், 24வது வார்டில் கொள்ளிடம் குடிநீர் 24 மணி நேரமும் வந்துகொண்டிருக்கிறது. அங்கு வால்வு அமைக்கவேண்டும். 20வது வார்டில் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது என்றார்.

கவுன்சிலர் வக்கீல் பாஸ்கர் பேசுகையில், அனுமதியில்லாமல் நகரில் போடப்படும் பிளாட்டுகளுக்கு நகராட்சி சார்பில் எந்த வசதியும் செய்துகொடுக்கக்கூடாது என்றார்.

கவுன்சிலர் வெங்கடசுப்பிரமணியன் பேசுகையில், எனது வார்டில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீரை இரவு நேரத்தில் மோட்டார் போட்டு சாலையில் இறைத்துவிடுகிறார். இதற்கு நகராட்சி ஊழியர்கள் உடந்தையாக உள்ளதாக தெரிகிறது என்றார்.

ஆணையர் திருமலைவாசன் பேசுகையில், கழிவுநீரை வெளியேற்றுவதில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள் யார் என்று தெரிவித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.