Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசை, சால் வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு இலவசமாக குடிநீர் விநியோகம்

Print PDF

தினகரன் 03.08.2010

குடிசை, சால் வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு இலவசமாக குடிநீர் விநியோகம்

மும்பை, ஆக. 3: குடிசைப் பகுதி மற்றும் சால் வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோகம் செய்ய மும்பை மாநகராட்சி முடிவு செய் துள்ளது. இது தொடர்பான தீர்மானத்துக்கு மேயர் ஸ்ரத்தா ஜாதவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

தற்போது மும்பையில், அடுக்குமாடி குடியிருப்பு களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை விட, குடிசைப் பகுதிகளுக்கு விநியோகிக்கும் குடிநீருக்கு மாநகராட்சி குறைந்த கட்டணம் வசூலித்து வருகிறது.

இது தொடர்பாக காங் கிரஸ் உறுப்பினர் வினோத் சேகர் மாநகராட்சி பொதுக் குழுவில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அவர் பேசுகையில், "ஏழை மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிக ளுக்கு மாநகராட்சி நிர் வாகம் குறைந்த கட்ட ணத்தில் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. ஆனால், குடிசைப் பகுதியை சேர்ந்த ரவுடி கும்பல்கள், குடிநீர் இணைப்புகளை பெற்று, பொதுமக்களுக்கு அதிக கட்டணத்தில் குடிநீர் சப்ளை செய்கின்றன.

வேறு சிலர் குடிசைப் பகுதிகளில் விநியோகிக்கப் படும் குடிநீரை சட்டவிரோத மாக டேங்கர் லாரிகளில் நிரப்பி, நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடங்களிலும், கட்டு மானப்பணிகள் நடக்கும் இடங்களிலும் பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்பதை தொழிலாக செய்து வருகின் றனர். இதனால் குடிசைகள் மற்றும் சால் வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு குடிநீர் போதிய அளவில் கிடைப்பதில்லை. குடிசை பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் பலனடைய அவர்களுக்கு இலவசமாக குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்" என்றார்.

இதற்கு பல கட்சி உறுப் பினர்கள் ஆதரவு தெரிவித் தனர். இந்த தீர்மானத்துக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளித்த மேயர் ஸ்ரத்தா ஜாதவ், இத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர் பாக முடிவு செய்ய தீர்மா னத்தை மாநகராட்சி கமி ஷனர் சுவாதின் ஷத்திரியா வுக்கு அனுப்பி வைத் துள்ளார்.