Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குறிச்சி&குனியமுத்தூர் திட்டத்தில் உடைந்த குழாயை சீரமைக்க குடிநீர் வெளியேற்றம்

Print PDF

தினகரன் 04.08.2010

குறிச்சி&குனியமுத்தூர் திட்டத்தில் உடைந்த குழாயை சீரமைக்க குடிநீர் வெளியேற்றம்

கிணத்துக்கடவு, ஆக.4: குறிச்சி&குனியமுத்தூர் குடிநீர் திட்டத்தில் கிணத்துக்கடவு அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சீர்படுத்த குடிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

ஆழியார்& குறிச்சி& குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.79.16 கோடியில் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த துணை முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின்படி ஆத்துப்பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் ஆற்றுத்தண்ணீர் எடுக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் கோவை குனியமுத்தூர் வரை கொண்டு வரப்படுகிறது. இதற்காக ஆச்சிப்பட்டி, கிணத்துக்கடவு, குறிச்சி ஆகிய இடங்களில் நீரேற்று நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டத்தால் கிணத்துக்கடவுக்கு நாள் ஒன்றுக்கு 4.40லட்சம் லிட்டர் குடிநீரும், குறிச்சிக்கு 43.30லட்சம் லிட்டர் குடிநீரும், குனியமுத்தூருக்கு 32.70லட்சம் லிட்டர் குடிநீரும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கிணத்துக்கடவில் இருந்து குறிச்சி செல்லும் குடிநீர் குழாய் பாதையில் கிணத்துக்கடவு செக்போஸ்ட் அருகே நேற்று திடீர் உடைப்பு ஏற்பட்டது. அதை சீர்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குழாய் முழுக்க முழு வேகத்தில் குடிநீர் செல்வதால் சீரமைப்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கிணத்துக்கடவு கிருஷ்ணவேணி தியேட்டர் அருகே உள்ள ஏர்வால்வு திறக்கப்பட்டது. அதன் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ரோட்டில் பாய்ந்தது. குழாயில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதையடுத்து குழாய்உடைப்பை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.