Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வால்பாறையின் நீராதாரமான அக்காமலை தடுப்பணை நிரம்பி வழிகிறது குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை

Print PDF

தினகரன் 04.08.2010

வால்பாறையின் நீராதாரமான அக்காமலை தடுப்பணை நிரம்பி வழிகிறது குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை

வால்பாறை,ஆக.4:வால்பாறையின் குடிநீர் ஆதாரமான அக்காமலை தடுப்பு அணை நிரம்பி வழிகிறது. இதனால் புதிய குடிநீர் இணைப்பு வழங்க நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பிஏபி திட்டத்தின் முக்கிய அணையான சோலை யார் அணையின் நீர்மட்டம் 120 அடியை தாண்டியது. மற்ற அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வால்பாறை நகருக்கு அக்காமலையில் உள்ள தடுப்பணை முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த புல்மலை பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருப்பதாலும், நிலத்தடி நீர் வற்றாத பூமியாக இருப்பதாலும் வால்பாறைக்கு 365 நாளும் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் இருந்ததில்லை.வால்பாறைக்கு தற்போது இரண்டாம் குடிநீர் திட்டம் சுமார் ரூ.2.34 கோடியில் நிறைவேற்றப் பட்டுள்ளது. அக்காமலை தடுப்பணையில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய இரும்பு குழாய் பதிக்கப்பட்டு புவிஈர்ப்பு சக்தி முலம் வால்பாறைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. போதிய நீராதாரம் இருப்பதால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்பு கொடுக்க நகரா ட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நகரா ட்சி அதிகாரிகள் கூறுகையில், ரூ.10 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், சொத்துவரி ரசீது உள்ளிட்ட உரிய ஆவணங் களை வை த்து ரூ 100 செலுத்தி பதிவு செய்து கொ ள்ள வேண்டும். பதிவு செய்த தேதியில் இருந்து பதிவு மூப்பு எடுத்துக்கொள்ளப்படும். வீட்டு இணைப்புகளுக்கு ரூ.5 ஆயி ரம், பிற இணைப்புகளுக்கு ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். பொருத்துதல் மற்றும் இதர கட்டணங்கள் தனியாக வசூலிக்கப்படும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் 42 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றனர்.