Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்​டுக்​கல் நகர் குடி​நீர்ப் பிரச்​னைக்கு நிரந்​த​ரத் தீர்வு என்ன?

Print PDF

தினமணி 06.08.2010

திண்​டுக்​கல் நகர் குடி​நீர்ப் பிரச்​னைக்கு நிரந்​த​ரத் தீர்வு என்ன?

திண்​டுக்​கல்,​​ ​ ஆக.​ 5:​ திண்​டுக்​கல் நக​ரில் நீண்ட கால​மாக நீடித்து வரும் குடி​நீர் பிரச்னை தீர்க்​கப்​ப​டுமா?​ என்று பொது​மக்​கள் கேள்வி எழுப்பி உள்​ள​னர்.​

​ ​ ​ திண்​டுக்​கல் நக​ரில் தற்​போது 20 நாளுக்கு ஒரு முறை குடி​நீர் விநி​யோ​கம் செய்​யப்​ப​டு​கி​றது.​ இந்​தக் குடி​நீ​ரும் குழாய் இணைப்பு உள்ள அனைத்து வீடு​க​ளி​லும் முறை​யாக வரு​வ​தில்லை.​ பலர் மின்​மோட்​டார் மூலம் தண்​ணீரை உறிஞ்சி விடு​கின்​ற​னர்.​ மோட்​டாரை நிறுத்​திய பின்​னர் தான் மற்ற குழாய்​க​ளுக்கு தண்​ணீர் கிடைக்​கும் நிலை உள்​ளது.​ ​

​ ​ ​ திண்​டுக்​கல் நக​ரம் பாறை​கள் அதி​கம் நிறைந்த பகுதி.​ இத​னால் சில இடங்​கள் மேடா​க​வும்,​​ சில இடங்​கள் பள்​ள​மா​க​வும் உள்​ளது.​ மேடான பகு​திக்கு தண்​ணீர் வர மின்​மோட்​டா​ரைப் பயன்​ப​டுத்​தும் நிலை உரு​வா​கி​றது.​

​ ​ சிறப்​பான முறை​யில் நீர் மேலாண்மை செய்​வ​தன் மூலம் மின்​மோட்​டார் பயன்​ப​டுத்​து​வ​தைத் தவிர்க்க முடி​யும்.​ திண்​டுக்​கல் அருகே உள்ள கோ.ராம​நா​த​பு​ரம் ஊராட்​சி​யின் நீர் மேலாண்​மைத் திட்​டமே இதற்கு சாட்சி.​ ஊராட்​சி​யில் உள்ள அனைத்து வீடு​க​ளுக்​கும் குழாய் இணைப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.​ தண்​ணீர் திறந்து விடும்​போது மின்​மோட்​டா​ரையோ,​​ அல்​லது ஆழ்​து​ளைக் குழாய்​க​ளையோ வைத்து தண்​ணீர் பிடிக்க வேண்​டிய அவ​சி​யம் இல்லை.​

​ ​ நக​ருக்கு ஆத்​தூர் காம​ராஜ் சாகர் அணை மூலமே பெரு​ம​ளவு தண்​ணீர் வழங்​கப்​பட்டு வரு​கி​றது.​ 23 அடி கொள்​ளவு உள்ள அணை​யில் சுமார் 7 அடிக்​கும் மேல் சேறு நிரம்பி உள்​ளது.​ இந்த சேற்​றினை அகற்​றும் தொழில் நுட்​பம் தெரி​யாத கார​ணத்​தி​னால் மழைக்​கா​லங்​க​ளில் கிடைக்​கும் நீரினை முழு​மை​யா​கச் சேமிக்க இய​ல​வில்லை.​ ​

​ ​ ​ பேர​ணையி​லி​ருந்து மழைக் காலங்​க​ளில் மட்​டுமே கிடைக்​கும் நீரைக் கொண்டு விநி​யோ​க​மும்,​​ காவிரி கூட்​டுக் குடி​நீர்த் திட்​டம் மூலம் கிடைக்​கும் நீரை​யும் கொண்டே நக​ரின் தேவையை 15 முதல் 20 நாள்​க​ளுக்கு ஒரு முறை என விநி​யோ​கம் செய்​யப்​ப​டு​கி​றது.​

​ ​ ​ தற்​போது வைகை அணையி​லி​ருந்து ரூ.100 கோடி செல​வில் தனி​யாக குழாய் பதித்து திண்​டுக்​கல் நக​ருக்கு குடி​நீர் வழங்​கும் திட்​டத்தை மாநில அரசு தயா​ரித்​துள்​ளது.​ ஏற்​கெ​னவே பெரி​யாறு அணை பிரச்​னை​யால் வைகை​யில் தண்​ணீர் என்​பது கேள்​விக்​கு​றி​யா​கும் நிலை​யில் இத்​திட்​டம் முழு​மை​யான பலன் தருமா என்​பது தெரி​ய​வில்லை.​

​ ​ ​ நக​ரின் நிலத்​தடி நீர்​மட்​டம் வெகு​வா​கக் குறைந்து வரு​வ​தால் சுமார் 400 முதல் 500 அடி ஆழம் வரை ஆழ்​து​ளைக் குழாய் பதிக்​கும் நிலை உள்​ளது.​ பல வீடு​க​ளி​லும் நக​ராட்சி விநி​யோ​கம் செய்​யும் குடி​நீ​ரையே அனைத்து உப​யோ​கத்​துக்​கும் பயன்​ப​டுத்தி வரு​கின்​ற​னர்.​

​ ​ நக​ராட்​சி​யின் எல்​லை​யில் சுமார் 100 ஏக்​கர் பரப்​பில் 7 குளங்​கள் உள்​ளன.​ இவை முறை​யா​கப் பரா​ம​ரிக்​கப்​ப​டா​த​தால் ​ தூர்ந்து போய் வரு​கின்​றன.​ ​ ​ ரூ.100 கோடியை இந்​தத் திட்​டத்​துக்கு செல​வ​ழிப்​ப​தற்​குப் பதி​லாக ஆத்​தூர் காம​ராஜ்​சா​கர் அணை​யில் சேர்ந்​துள்ள சேற்றை முழு​மை​யாக அகற்​றி​யும்,​​ தூர்ந்து வரும் நீரா​தா​ரங்​களை மேம்​ப​டுத்​தி​னால் நிலத்​தடி நீர் அளவை அதி​க​ரிக்க முடி​யும்.​ இது மட்​டுமே தண்​ணீர் பிரச்​னைக்​கா​னத் தீர்​வாக அமை​யும்.​ ​

​ ​ ​ திண்​டுக்​கல் நக​ராட்சி,​​ மாவட்ட நிர்​வா​கம் மட்​டும் இப்​பி​ரச்​னைக்​குத் தீர்வு காண முடி​யாது.​ மாநில அரசு நிதியை ஒதுக்கி பணி​க​ளைத் துரி​தப்​ப​டுத்​தி​னால் மட்​டுமே குடி​நீர் பிரச்​னைக்​குத் தீர்வு காண முடி​யும்.​