Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ12 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் தகவல்

Print PDF

தினகரன் 09.08.2010

குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ12 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் தகவல்

குன்னூர், ஆக. 9: குடிநீர் பிரச்னையை தீர்க்க தேவை யான நடவடிக்கை எடுப்பதற்காக கோத்தகிரி பேரூ ராட்சி மற்றும் குன்னூர் நகராட்சிக்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப் பதாக கதர் வாரியத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டான ஆசிர் காம்பவுண்ட் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. உரிய சா லை வசதியின்றி இப்பகுதியினர் தவித்து வந்தனர்.

நகர்மன்ற கவுன்சிலர் செல் வம் வலியுறுத்தலின் பேரில், குன்னூர் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியின் மூலம் ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நகராட்சி சார்பில், ரூ.2 லட்சம் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மேலும் இந்த கிராமத்திற்கு செம்மொழி நகர் என பெயரிடப்பட்டது. நிகழ்ச்சியில் கவுன்சிலர் செல்வம், கிராம செயலாளர் மோகன் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட திமுக இளைஞரணி அணி துணை அமைப்பாளர் சார்லி, பொதுக்குழு உறுப்பி னர் அன்வர்கான் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

குன்னூர் எம்.எல்.ஏ சவுந் திர பாண்டியன் பேசுகையில், ‘2010&11ம் நிதியாண்டில் எம்.எல்.ஏ தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் ஒதுக்கப்பட்ட பணிகளில் இச்சாலை பணி தான் முதலாவதாக நிறைவு பெற்றுள்ளது.

இப்பகுதி மக்கள் நலனு க்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்து தரப்படும்என்றார்.

கதர் வாரியத்துறை அமைச் சர் ராமச்சந்திரன் புதிய நகரை திறந்து வைத்து பேசியதாவது:

மாவட்டத்திலுள்ள நகர, கிராமப்புறங்கள் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக் கில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு திட்டங்கள் போடப்பட்டுள் ளது. குன்னூர் நகருக்கு ஜிம்கா னா பகுதியில் இருந்து குடிநீர் பெற முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தினால் நகரிலுள்ள 6வது வார்டு மக்கள் பயன் பெறுவர். ஆனால் கன்டோன்மென்ட் நிர்வாகம் வேண்டும் என்றே பல்வேறு காரணங்களை கூறி வருகிறது.

இது தொடர்பாக கலெக் டர் உத்தரவுப்படி ஆய்வு செய்யப்பட்டது. இதில் பிரச்னைக்குரிய இடம் ம் வருவாய் துறைக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது. எனவே விரைவில் குன்னூர் நகராட்சிக்கு தேவையான நீரை பெற நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள நகர, கிராம சாலை களை மேம்படுத்த கடந்த நான் கரை ஆண்டுகளில் மத்திய, மாநில அரசு சார்பில் ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டது.

இந்தாண்டு பாரத் நிர் மான் திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வரும் முன் மாவட்டத்திலு ள்ள கிராம, நகர்ப்புற சாலை கள் மேம்படுத்தப்படும். குடிநீர் பிரச்னையை போக்க கோத்தகிரி பேரூராட்சி, குன் னூர் நகராட்சிக்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வ தில் முழு கவனம் செலுப்படுகிறது. இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு ராமச்சந்திரன் பேசினார்.

கோல போட்டியில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசு வழங்கப்பட்டது. தொ டர்ந்து பள்ளி மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை செம் மொழி நகர் துணை செய லாளர் வில்சன் தொகுத்து வழங்கினார். நிர்வாக உறுப்பினர் கணேஷ் நன்றி கூறினார். திமுகவை சேர்ந்த நந்தகுமார், வெங்கடேஷ், கவுன்சிலர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.