Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை, கோவை, நாகை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூரில் ரூ.1712 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம்; கருணாநிதி உத்தரவு

Print PDF

மாலை மலர் 11.08.2010

மதுரை, கோவை, நாகை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூரில் ரூ.1712 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம்; கருணாநிதி உத்தரவு

சென்னை, ஆக. 11- மதுரை, கோவை, நாகை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்காக 5 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும் ஒரு குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தையும் நிறைவேற்று வதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

105 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், செம்பனார் கோயில், மயிலாடுதுறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 295 குடியிருப்புகள் மற்றும் 315 வழியோரக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 173 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 பேரூராட்சிகள் மற்றும் இராச பாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 395 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

190 கோடி ரூபாய் மதிப் பீட்டில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர் ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 637 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 234 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருது நகர் மாவட்டம், சாத்தூர், வெம்பக் கோட்டை, சிவகாசி, விருதுநகர், வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 755 குடியிருப்பு களுக்கான கூட்டுக் குடிநீர்த்திட்டம்.

784 கோடி ரூபாய் மதிப் பீட்டில் மதுரை மாவட்டம், மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் நகராட்சிகள், .வெள்ளாளப்பட்டி, விளாங்குடி, பரவை, திருநகர், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 1430 குடியிருப்புகள் மற்றும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பேரூராட்சிக்கான கூட்டுக் குடிநீர்த்திட்டம்.

224 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயம் புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி, 23 பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 965 ஊரகக் குடியிருப்புகளுக்கான குடிநீர் மேம்பாட்டுத்திட்டம் என 5 கூட்டுக்குடிநீர்த் திட்டங்களையும், ஒரு குடிநீர் மேம் பாட்டுத் திட்டத்தையும், மொத்தம் 1711 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.