Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நம்பியூரில் ரூ.6 கோடியில் தனி குடிநீர் திட்டம்

Print PDF

தினமலர் 12.08.2010

நம்பியூரில் ரூ.6 கோடியில் தனி குடிநீர் திட்டம்

கோபிசெட்டிபாளையம்: ""நம்பியூர் டவுன் பஞ்சாயத்தில் ஆறு கோடி ரூபாய் செலவில் தனி குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளன,'' என, பஞ்சாயத்து தலைவர் கீதா முரளி கூறினார்.

அவர் கூறியதாவது: நம்பியூர் டவுன் பஞ்சாயத்து வெள்ளாப்பாளையம்-இச்சிபாளையம் ஊஞ்சக்காடு பிரிவு வரை 24.55 லட்சம் ரூபாய் செலவில் தார்சாலை வசதி, ஆரம்பள்ளி முதல் கரட்டுபாளையம் சாலை 18.25 லட்சம் ரூபாயில் தார்சாலை வசதியும் செய்யப்பட்டுள்ளது. பால்பண்ணை ரோடு - மலையப்பாளையம் ரோடு வரை வடிகால் வசதி, கெடாரை பெருமாள் கோவில் வீதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் வீதியில் 3.10 லட்சம் ரூபாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் எம்.எல்.., ஜீவா சுப்பிரமணியம் வளர்ச்சி நிதி 13.14 லட்சம் ரூபாயில் கல்லாங்காட்டுபாளையம் பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பிளியம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி முதல் மயானம் செல்லும் சாலை வரை ஆறு லட்சம் ரூபாய் செலவில் தார் ரோடு, வெள்ளாப்பாளையம் அம்பேத்கார் நகர் அரிஜன காலனியில் மயானம் செல்லும் பாதையில் 5.35 லட்சம் ரூபாயில் தார் ரோடு, செட்டியம்பதியில் 2.54 லட்சம் ரூபாயில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.

டவுன் பஞ்சாயத்து புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 3.40 லட்சம் ரூபாயில் மலையப்பாளையம் சாலை, பி.வி.ஆர்., தியேட்டர் ரோடு சாலை அமைத்தல், 8.90 லட்சம் ரூபாயில் நாச்சிப்பாளையம்- காமராஜ் காலணி இணைப்பு சாலை, வாரச்சந்தையில் 10 லட்சம் ரூபாயில் வணிக வளாகம், கெடாரை, மேட்டுபாளையத்தில் ஐந்து லட்சம் ரூபாயில் குட்டை மேம்பாடு, பழைய சூரிப்பாளையம் குறுக்கு வீதியில் 5.80 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை, 10 லட்சம் ரூபாயில் வாரச்சந்தை சுற்றுச்சுவர் மற்றும் விற்பனை மேடை அமைத்தல், ஐந்து லட்சம் ரூபாயில் சுடுகாடு மேம்பாடு, 2.70 லட்சம் ரூபாயில் காந்திபுரம் டீச்சர்ஸ் காலனியில் சிமென்ட் சாலை, மூன்று லட்சம் ரூபாயில் சத்யா நகர் குறுக்கு வீதியில் கான்கிரீட் தளம் ஆகிய பணிகள் நடக்கிறது.

இச்சிப்பாளையம் - வலசுவரை 10 லட்சம் ரூபாயில் தார்சாலை வசதி, எம்.எல்.., நிதி 15.40 லட்சம் ரூபாயில் கோவை மெயின் ரோடு, பழைய சூரிப்பாளையத்தில் கான்கிரீட் தளம், புதிதாக 30 தெரு விளக்குகள் அமைக்க எம்.எல்.., சுப்பிரமணியம் நிதி ஒதுக்கியுள்ளார். 33.60 லட்சம் ரூபாயில் பஸ் ஸ்டாண்டில் சுற்றுச்சுவர், கான்கிரீட் தளம், ஆறு லட்சம் ரூபாயில் வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. நம்பியூர் டவுன் பஞ்சாயத்தில் மாக்கினாங்கோம்பை பவானியாற்றில் இருந்து 6.15 கோடி ரூபாயில் தனி குடிநீர்த்திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 5,000 புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும். நான்கு ஆண்டுகளில் நம்பியூர் டவுன் பஞ்சாயத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். செயல் அலுவலர் மதிவாணன் உடனிருந்தார்.