Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.1,711 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள்: முதல்வர் ஒப்புதல்

Print PDF

தினமலர் 12.08.2010

ரூ.1,711 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள்: முதல்வர் ஒப்புதல்

சென்னை : மதுரை, கோவை, நாகை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 1,711 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் செய்திக்குறிப்பு: நாகை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், செம்பனார் கோவில், மயிலாடுதுறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 295 குடியிருப்புகள் மற்றும், 315 வழியோரக் குடியிருப்புகளுக்கான 105 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கும், விருதுநகர் மாவட்டத்தில் ஏழு பேரூராட்சிகள், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த, 395 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டங்களை, 173 கோடி ரூபாய் மதிப்பில் நிறறைவேற்றவும் முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். மொத்தம் ஐந்து கூட்டுக் குடிநீர் திட்டங்கள், ஒரு குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு, 1,711 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்ற, இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.