Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவொற்றியூரில் அடிக்கல் ஸி 88 கோடியில் குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன் 13.08.2010

திருவொற்றியூரில் அடிக்கல் ஸி 88 கோடியில் குடிநீர் திட்டம்

திருவொற்றியூர், ஆக.13: திருவொற்றியூரில் ஸி 88 கோடி செலவில் வீடுகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. திருவொற்றியூர் நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன.

இங்கு வசிக்கும் மக்களுக்கு குழாய் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் வாரியம் தினமும் 25 லட்சம் லிட்டர் தண்ணீர்தான் தருகிறது. இதனால் குடிநீர் பிரச்னையால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதையடுத்து மத்திய மாநில அரசு நிதியுதவியுடன் திருவொற்றியூர் நகராட்சி ஸி88 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் உருவாக்கியது. இதன் மூலம் நகராட்சி பகுதிகளில் 12 குடிநீர் தொட்டிகள் அமைத்து, தினமும் 138 லட்சம் லிட்டர் குடிநீர் தேக்கி, தெருக்களில் 187 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் அமைத்து வீடுகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க திட்டம் தயாரிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா, காலடிப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் நேற்று நடந்தது. குடிநீர் வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் வரவேற்றார். மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

நகராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் ராமநாதன், நகர திமுக செயலாளர் தனியரசு, நகராட்சி குடிநீர் மேற்பார்வையாளர் விஜயநிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.