Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஊராட்சிகோட்டையில் இருந்து ரீ300 கோடி தூயகுடிநீர் திட்டம் நவம்பரில் பணி துவங்க முடிவு மேயர் தகவல்

Print PDF

தினகரன் 17.08.2010

ஊராட்சிகோட்டையில் இருந்து ரீ300 கோடி தூயகுடிநீர் திட்டம் நவம்பரில் பணி துவங்க முடிவு மேயர் தகவல்

ஈரோடு, ஆக. 17: ஈரோடு அன்னை நகர் இளையநிலா நண்பர்கள் மன்றம் சார்பில் சுதந்திர தின விழா, மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா, சூரம்பட்டி 1வது வார்டு கவுன்சிலர் சாம்ராட்அசோகனுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. விழாவில் திமுக ஒன்றிய அவைத்தலைவர் சின்னசாமி வரவேற்றார். விடியல்சேகர் எம்எல்ஏ கொடியேற்றி வைத்து பேசினார். சூரம்பட்டி நகராட்சி முன்னாள் தலைவர் சுப்ரமணியம் தலை மை வகித்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். நந்தகோபால், செந்தில்வேல் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் சாம்ராட்அசோகனுக்கு மாலை அணிவித்து திமுக மாவட்ட துணை பொறுப்பாளர் சச்சிதானந்தம் பேசினார். காசிபாளையம் நகராட்சி தலைவர் சுப்ரமணியம், இளையநிலா நண்பர்கள் மன்றத்தை சேர்ந்த ஈஸ்வரன், முருகன், தனசேகர், குமார், ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண் டனர்.

பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கிய மேயர் குமார்முருகேஷ் பேசியதாவது: ஈரோடு மாநகராட்சி, சூரம்பட்டி, காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர் நகராட்சிகள் மற்றும் பி.பெ.அக்ரஹாரம் பேரூ ராட்சி ஆகியவற்றை இணை த்து ரூ.209 கோடி செலவில் பாதாள சாக்கடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சாக்கடையில் சாயக்கழிவுகள், கழிப்பிட கழிவுகள் என பல்வேறு கழிவுகளும் ஓடுகிறது. இக்கழிவுநீர் அனைத்தும் பாதாளசாக் கடை மூலமாக சேகரி க்கப்பட்டு காசிபாளையம் அருகிலுள்ள பீளமேடு பகுதியில் காவிரி ஆற்றுக்கு அருகில் சேகரித்து அங்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை ஆற்றில் விடும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிர மாக நடந்து வருகிறது. இப்பணி இன்னும் ஒரு ஆண்டுக்குள் முழுவதுமாக முடிவடைந்து விடும். பயனுள்ள பாதாளசாக்கடை திட்டத்திற்கு மக்கள் நல்ஆதரவு அளிக்க வேண்டும்.

இதேபோல ஈரோடு மாநகராட்சி மக்களுக்காக ஊரா ட்சிகோட்டையில் இருந்து ரூ.300 கோடி செலவில் மாசுபடாத குடிநீரை குழாய் மூலம் கொண்டு வந்து ஈரோடு மக்களுக்கு விநியோ கம் செய்வதற்கான திட்டத்தின் துவக்கவிழா வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் துவங்கப்பட உள்ளது. இப்பணியை 2 ஆண்டுக்குள் நிறைவு செய்து மக்களுக்கு தூய குடிநீரை விநியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு மேயர் குமார்முருகேஷ் தெரிவித்தார். முடிவில் ஈ.குமார் நன்றி கூறினார்.