Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தால் செங்கோட்டை மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ பேச்சு

Print PDF

தினகரன் 20.08.2010

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தால் செங்கோட்டை மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ பேச்சு

செங்கோட்டை, ஆக.20: தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தால் செங்கோட்டை பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளதாக இலவச டிவிகளை வழங்கி கருப்ப சாமி பாண்டியன் எம்எல்ஏ பேசினார்.

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச டிவி வழங்கும் விழா நடந்தது. நகர்மன்ற தலைவர் ரஹீம் தலைமை வகித்தார். ஆணையாளர் ராமகிருஷ்ணராஜா முன் னிலை வகித்தார். தாசில்தார் ராசையா வரவேற்றார். துணைத்தலைவர் ஆதி மூலம், கவுன்சிலர் முஸ்தபா உட்பட பலர் பேசினர். தென்காசி நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம், ஒன்றிய செயலாளர்கள் காசிதர்மம் துரை, ராமையா என்ற துரை, பரமசிவன், மாவட்ட பொருளாளர் சேக்தாவூது, தென் காசி நகர செயலாளர் ஆயான் நடராஜன், கவுன்சிலர் ரகியானாபீவி, ரவீந்திரன், ஐயப்பன், கல்யாணி, இளைஞரணி ரபீக், சாட்டை யடி சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் 7 ஆயிரத்து 401 பயனாளிகளுக்கு இலவச டிவிக்களை வழங்கி கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ பேசுகையில், 1397967985 செங்கோட்டை பகுதியில் திமுக ஆட்சிக் காலத்தில் ஏராளமான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தால் இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட தலைநகராக மாறுவதற்கு உரிய அனைத்து கட்டமைப்பும் உருவாகி வருகிறது. விரைவில் ரூ.27 கோடியில் தென்காசி புறவழிச்சாலை அமையள்ளது. இதன் துவக்க விழாவிற்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.

செங்கோட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளதுஎன்றார். மண்டல துணை தாசில்தார் சௌந் தரராஜன் நன்றி கூறி னார்.