Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொடர் மழையால் கிடைத்த பலன் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

Print PDF

தினகரன் 24.08.2010

தொடர் மழையால் கிடைத்த பலன் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை, ஆக. 24: தொடர் மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வெப்ப சலனம் மற்றும் குறைந்த காற்றழுத்தத்தால் காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

ஏரிகளில் நீர் இருப்பு விவரம்:

பூண்டி ஏரி: கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. இருப்பு 1,153 மில்லியன் கன அடி. மழைநீர் வரத்து 296 கன அடி. பேபி கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு 30 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம்: கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. இருப்பு 1,702 மி.கன அடி. மழை நீர் வரத்து 469 கன அடி. சென்னை குடிநீருக்கு 75 கன அடி வெளியேற்றப்படுகிறது.

புழல்: கொள்ளளவு 3,300 மி.கன அடி. இருப்பு 2282 மி.கன அடி. மழைநீர் வரத்து 806 கன அடி. சென்னைக்கு 158 கன அடி வெளியேற்றப்படுகிறது.

சோழவரம்: கொள்ளளவு 881 மி.கன அடி. இருப்பு 230 மி. கன அடி. மழைநீர் வரத்து 394 கன அடி.