Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செப்டம்பர் இறுதி வரை குடிநீர் வெட்டு தொடர்ந்து நீடிக்கும்

Print PDF
தினகரன் 26.08.2010

செப்டம்பர் இறுதி வரை குடிநீர் வெட்டு தொடர்ந்து நீடிக்கும்

மும்பை,ஆக.26:மும்பை யில் தற்போதுள்ள குடிநீர் வெட்டு செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மும்பையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்துள்ளது. இதனால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகள் ஏற்கனவே நிரம்பி விட்டன. ஆனால் அதிகப்படியான தண்ணீர் வழங்கும் பாட்சா மற்றும் அப்பர்வைதர்ணா ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை.

ஆறு ஏரிகளிலும் தற்போது 10.92 லட்சம் மில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. ஆனால் ஆண்டு முழுவதுக்கும் மும்பையில் குடிநீர் விநியோகம் செய்ய 13.5 லட்சம் மில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீர் தேவையாகும்.

தற்போது தினமும் மும்பையில் 3100 மில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் போதிய அளவுக்கு தண்ணீர் இருப்பதால் குடிநீர் வெட்டை ரத்து செய்யவேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரி வந்தனர்.ஏற்கனவே 15 சதவீதமாக இருந்த குடிநீர் வெட்டு 7 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. அதையும் அடியோடு நீக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர். இந்நிலையில் இக் கோரிக்கை குறித்து மாந கராட்சி துணை கமிஷனர் தினேஷ் கோண்டாலியா அளித்த பேட்டியில்,‘ கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏரிகளில் திருப்தியளிக்கும் வகையில் தண்ணீர் இருக்கிறது.

ஆனாலும் அடுத்த மழைகாலம் வரை தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டியதிருப்பதால் தற்போதுள்ள குடிநீர் வெட்டு செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். தற்போதுள்ள குடிநீர் வெட்டை ரத்து செய்வது குறித்து அக்டோபர் ஒன்றாம் தேதி ஆய்வு செய்யப்படும். ஆனால் அதற்குள் பாட்சா மற்றும் அப்பர்வைதர் ணா ஏரிகள் நிரம்பி விட்டால் முன்கூட்டியே குடிநீர் வெட்டு குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப் படும்.

பாட்சா மற்றும் அப்பர்வைதர்ணா ஏரிகள் நிரம்பினால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். பாட்சா ஏரி நிரம்ப இன்னும் 6.5 மீட்டரும் அப்பர்வைதர்ணா ஏரி நிரம்ப 2.75 மீட்டரும் பாக்கி இருக்கிறதுஎன்று தெரிவித்தார்.