Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனைவருக்கும் குடிநீர் இணைப்பு: பல்லடம் நகராட்சி அறிவிப்பு

Print PDF

தினமணி 31.08.2010

அனைவருக்கும் குடிநீர் இணைப்பு: பல்லடம் நகராட்சி அறிவிப்பு
பல்லடம், ஆக. 30: பல்லடம் நகராட்சி பகுதியில் அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று நகராட்சி பொறியாளர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

÷பல்லடம் நகராட்சி (முதல் நிலை) மன்ற அவசரக் கூட்டம், தலைவர் ஆர்.ராமமூர்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடந்தது. இதில் துனைத்தலைவர் சேகர், செயல்அலுவலர் பெஞ்சமின் குணசிங், பொறியாளர் சாந்தகுமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:

ராஜேந்திரகுமார்: நகராட்சி குப்பை கொட்ட கேத்தனூர் பகுதியில் வாங்கிய இடத்தில் குப்பை கொட்டப்படுகிறதா?

தலைவர்: அப்பகுதியில் காற்றாலைகள் அதிக அளவில் இருப்பதால் அவ்விடத்தில் குப்பை கொட்டினால் காற்றாலைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் அவ்விடத்தில் நகராட்சி சார்பில் ஒரு காற்றாலை அமைத்துக்கொள்ள நகராட்சி இயக்குனர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது. குப்பை கொட்ட வேறு இடம் பார்த்து கொண்டு உள்ளோம்.

சரளை ரத்தினசாமி: குடிநீர் இணைப்புகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். மங்கலம் சாலை - திருப்பூர் சாலையை இணைக்கும் சாலைக்கு புதிய தார்ச் சாலை அமைக்க வேண்டும்.

பொறியாளர்: முன்பு விண்ணப்பம் அளித்த 2,500 பேருக்கும் தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் பிரதானக் குழாய் செல்லும் பகுதியில் யார் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளித்தாலும் அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

துணைத் தலைவர்: சந்தைப்பேட்டையில் சிறுநீர்க் கழிப்பிடம், குடிநீர்க் குழாய் வசதி உடனடியாக செய்ய வேண்டும்.

÷சத்தியமூர்த்தி: கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகத்தில் தி.மு.. கவுன்சிலர் கவுஸ்பாட்ஸôவை அதே கட்சியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி தாக்கியது கண்டனத்திற்குரியது. வெள்ளியங்கிரி மீது காவல் துறையினர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?

ஜெகதீசன்: கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வெள்ளியங்கிரிக்கு நகராட்சி டெண்டர் வேலைகளை வழங்கக் கூடாது.

துணைத் தலைவர்: நகராட்சி அலுவலகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. நகராட்சி அதிகாரி ஏன் போலீசில் புகார் அளிக்கவில்லை?

தலைவர்: நகராட்சி அலுவலகத்தில் இச்சம்பவம் நடந்தது வருத்தம் அளிக்கிறது. இது குறித்து வெள்ளியங்கிரி, நகராட்சிக்கு மன்னிப்பு கடிதம் அளிக்க வேண்டும். அவருக்கு ஒர் ஆண்டுக்கு நகராட்சி ஒப்பந்த வேலைகள் வழங்கப்படாது.

÷இவ்வாறு விவாதம் நடந்தது.