Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிரம்மதேசம், மன்னார்கோவிலுக்கு ரூ.1 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன் 08.09.2010

பிரம்மதேசம், மன்னார்கோவிலுக்கு ரூ.1 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்

நெல்லை, செப். 8: பிரம்மதேசம், மன்னார்கோவில், வாகைக்குளத்திற்கு ரூ.ஒரு கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம் அருகே கோடாரங்குளத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம், ரூ.3.70 லட்சம் மதிப்பில் நூலக கட்டடம், மன்னார்கோவிலில் ரூ.3.70 லட்சம் மதிப்பில் நூலக கட்டடம் ஆகியவற்றை சபாநாயகர் ஆவுடையப்¢பன் திறந்து வைத்து பேசியதாவது:

தமிழக முதல்வர் ஆட்சியில் நகர்ப்புற மாணவர்களை போல கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய நூலகங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே கிராமப்புற மாணவர்கள் இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி தங்கள் பொது அறிவை வளர்த்துக¢ கொள்ள வேண்டும்.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் தேவையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பிரம்மதேசம், மன்னார்கேவில், வாகைக்குளத்திற்கு ரூ.ஒரு கோடியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.ஒரு கோடியே 24 லட்சம் மதிப்பில் கோடாரங்குளம் ஊராட்சி பகுதியில் 86 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகர்ப்புற மக்கள் மட்டுமல்லாது கிராமப்புற மக்களும் பயன் பெறும் வகையில் பல்வேறு புதிய நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவிற்கு கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். அம்பாசமுத்த¤ரம் நகராட்சி தலைவர் பிரபாகரபாண்டியன், யூனியன் துணை சேர்மன் சிவகுருநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவீந்திரன், பிடிஓ இந்திரா, கவுன்சிலர் சிவசாமிநாதன், கோடாரங்குளம் பஞ். தலைவர் ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சபாநாயகர் ஆவுடையப்பன் தகவல்

அம்பாசமுத்திரம் அருகே கோடாரங்குளத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் ஜெயராமன்.