Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்காக ரூ 8,000 கோடி ஒதுக்கீடு: ஸ்டாலின்

Print PDF

தினமணி 09.09.2010

கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்காக ரூ 8,000 கோடி ஒதுக்கீடு: ஸ்டாலின்

திருச்சி, செப். 8: தமிழகத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்காக கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ 8,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் துணை முதல்வர் மு.. ஸ்டாலின்.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக புதியக் கட்டட திறப்பு விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:

"கடந்த நான்கரை ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்காக ரூ 8,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம், கோவை, திருப்பூர் மக்களுக்காக ரூ 724 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம், நாகப்பட்டினம் மக்களுக்காக ரூ 105 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், வேலூரில் ரூ 1,318 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் எனப் பல்வேறு குடிநீர்த் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

சேலம் பகுதி மக்களுக்காக குடிநீர்த் திட்டத்துக்கு ரூ 212 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்படவுள்ளன. திருச்சியை மாநிலத்தின் தலைநகரமாக்க வேண்டும் என்ற பேச்சு இருந்தது. ஆனால், தற்போது சென்னைக்கு இணையாக திருச்சி வளர்ந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள மாவட்டத் தலைநகரங்கள் அனைத்தும் மாநில தலைநகருக்கு இணையாக வளர்ந்து வருகின்றன' என்றார் ஸ்டாலின்.

கே.என். நேரு: போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு பேசியது:

"திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டவை. மேலும், திருச்சி நகருக்கு மிகத் தேவையான வெள்ளத் தடுப்புப் பணிக்காக ரூ 74 கோடியில் திட்டங்கள், ரூ 169 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன' என்றார் அவர்.

.பெரியசாமி: மாநில வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியது:

"ஆட்சேபகரமற்ற இடங்களில் குடியிருந்து வருபவர்களுக்காக ஏழரை லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ 2,618 கோடி. திருச்சியில் சில ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நிலமற்ற ஏழைகளுக்காக ரூ 322 கோடியில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் உள்ள திருச்சி நவல்பட்டு வீட்டுவசதி வாரியத்தில் வீடு பெற்ற 2,000 பேருக்கு 1980-ம் ஆண்டு மதிப்பீட்டில் பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் விரைவில் அனைவருக்கும் பத்திரம் வழங்கப்பட்டுவிடும்' என்றார் பெரியசாமி.

என். செல்வராஜ்: வனத் துறை அமைச்சர் என். செல்வராஜ் பேசியது:

"ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கும் கருணாநிதி ஆறாவது முறையாகவும் முதல்வராக ஆவார்' என்றார் செல்வராஜ்.

து. நெப்போலியன்: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் து. நெப்போலியன் பேசியது:

நம் நாட்டில் 2 கோடியே 19 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 6 லட்சம்தான். ஒரு நாட்டின் மக்கள் தொகையைவிட, மாற்றுத் திறனாளிகள் அதிகம் உள்ள நம் நாட்டில் அவர்களின் மறுவாழ்வுக்கு என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக தனித் துறையை உருவாக்கி அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தியுள்ளார் முதல்வர் கருணாநிதி' என்றார் நெப்போலியன்.

பின்னர், ரூ 335 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட 715 திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டன.

ரூ 194.66 கோடியில் 13,426 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. 7,791 பேருக்கு ரூ 12.57 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என். சிவா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், . செüந்தரபாண்டியன், இரா. ராணி, மா. ராஜசேகரன், வருவாய்த் துறைச் செயலர் கி. தனவேல், மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா ஆகியோர் பேசினர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.. ராமன் நன்றி கூறினார்.