Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழையால் நீர்வரத்து குடிநீர் ஏரிகளில் தண்ணீர் அதிகரிப்பு கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகம்

Print PDF

மாலை மலர் 14.09.2010

மழையால் நீர்வரத்து குடிநீர் ஏரிகளில் தண்ணீர் அதிகரிப்பு கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகம்

மழையால் நீர்வரத்து
 
 குடிநீர் ஏரிகளில் தண்ணீர் அதிகரிப்பு 
 
 கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகம்

சென்னை, செப்.14- சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு அவ்வப்போது தணணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று இரவு பெய்த மழையால் ஏரிகளுக்கு மீண்டும் தண்ணீர் வருகிறது. பூண்டி ஏரி நீர்பிடிப்பு பகுதியில் 9.4 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. செங்குன்றத்தில் 1 மி.மீ., சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் பகுதியில் 5 மி.மீ. மழை பெய்துள்ளது. வீராணத்தில் 12.2 மி.மீ. மழை பெய்தது.

இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 58 கன அடி தண்ணீர் வருகிறது. புழல் ஏரிக்கு 140 கன அடியும், சோழவரத்துக்கு 185 கனஅடியும், செம்பரம் பாக்கத்துக்கு 93 கனஅடியும் வருகிறது. வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1300 வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு இதே நாளில் சென்னை குடிநீர் ஏரிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 755 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 5 ஆயிரத்து 454 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இது கடந்த ஆண்டு இருந்த தண்ணீரை விட சுமார் 2 மடங்கு அதிகமாகும்.

தமிழ்நாட்டில் இன்னும் வடகிழக்கு பருவமழை தொடங்கவில்லை. என்றாலும் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பசலனம் காரணமாக மழை பெய்வதால் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20அடி. இன்றைய நீர்மட்டம் 11.11 அடி. பூண்டி ஏரியின் இன்றைய நீர்மட்டம் 27.90 அடி. இதன் மொத்த உயரம் 35 அடி. சோழவரம் ஏரி உயரம் 17.86 அடி. இன்றைய நீர்மட்டம் 9.14 அடி. செம்பரம்பாக்கத்தில் தற்போதைய நீர்மட்டம் 15.79 அடி. மொத்த உயரம் 24 அடி. வீராணம் ஏரியில் இன்று காலை நீர்மட்டம் 12.20 அடி. இதன் மொத்த உயரம் 15.60 அடி.

தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பருவமழையும் தொடங்க இருக்கிறது. எனவே ஏரிகள் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது என்று குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.