Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எதிர்பார்த்த மழை இல்லை சிறுவாணி அணையில் 4 மாதத்துக்கே குடிநீர்

Print PDF

தினகரன் 20.09.2010

எதிர்பார்த்த மழை இல்லை சிறுவாணி அணையில் 4 மாதத்துக்கே குடிநீர்

கோவை, செப். 20: சிறுவாணி அணைப் பகுதியில் இந்தா ண்டு எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைவாகவே உள்ளது. தற் போதைய நிலவரப்படி 4 மாதத்திற்கு மட்டுமே குடிநீர் விநியோகிக்க முடியும்.

கோவை மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக சிறு வாணி, பில்லூர் அணைகள் உள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 878.5 மீட்டராக உள்ளது. சிறுவாணி அணை யில் இருந்து தினமும் 6 முதல் 7 கோடி லிட்டர் வரை நீர் எடுக்கப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில் லை. தென்மேற்கு பருவமழை கடந்தாண்டைக் காட்டிலும் தற்போது 20 சதவீத மழை குறைந்தே பெய்துள்ளது.

அணைக்கு நீர் ஆதார மான பாம்பாறு, பட்டியாறு, கோபியாறு உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்தும் குறை வாகவே உள்ளது. தற்போது தினமும் 1 செ.மீ அளவிற்கு அணையின் நீர்மட்டம் குறைந்து கொண் டே செல்கிறது. மழையே பெய்யாவிட்டால் தொடர்ச்சியாக 4 மாதத்திற்கு மட்டு மே குடிநீர் சப்ளை செய்ய முடியும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிறுவாணி அணையில் தற்போது போதிய குடிநீர் உள்ளது. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு மழை குறைவு. தற்போதைய அளவின் படி மேலும் 4 மாதங்களுக்கு சீராக குடிநீர் விநியோகிக்க முடியும். மழை பெய்யாவிட்டால் குடிநீர் விநியோக அளவைக் குறைக்க வேண்டி யது இருக்கும்என்றார்.

மாநகர மக்களுக்கு தொ டர்ந்து சீரான குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டுமானால் சிறுவாணி அணை பகுதியில் மழை பெய்தே ஆக வேண்டிய நிலை உள் ளது. ஓரிரு மாதங்களுக்குள் வடகிழக்கு பருவமழை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சிறுவாணி அணை நிரம்பும் எனத் தெரி கிறது.