Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

27ம் தேதி புதிய குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல்

Print PDF

தினமலர் 21.09.2010

27ம் தேதி புதிய குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல்

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சிக்கு வரும் 27ம் தேதி அன்று மாநில அளவிலான ஒப்புதல் குழுவின் ஒப்புதல் பெற்று புதிய குடிநீர் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து தொடர்ந்து 3 நாட்களாக நடந்து வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சியில் காலாவதியான பைப்லைன் திட்டத்தை கொண்டு ஏறக்குறைய ஒரு லட்சம் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் கோவில்பட்டி எதிர்கட்சிகள் சார்பில் குடிநீர் திட்டத்திற்கான 80கோடி நிதியை ஒதுக்கீடு செய்யும் வரை காலவரையற்ற உண்ணாவிரதத்தை மா.கம்யூ., நகரச் செயலாளர் சீனிவாசன் துவக்கினார். தற்போது உண்ணாவிரதம் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று நடந்தது. இதில் கோவில்பட்டி தாசில்தார் கந்தசாமி, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி, நகராட்சி கமிஷனர் விஜயராகவன் உள்ளிட்ட அதிகாரிகள் உண்ணாவிரத பந்தலில் சீனிவாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் 27ம் தேதி குடிநீர் நிதி ஒதுக்கீடு அறிவிப்பதாகவும், அதையும் மாநில நகராட்சி நிர்வாகம் தான் அறிவிக்க இயலும் என்றும், அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாகவும், எழுத்துப்பூர்வமான உறுதிமொழி வழங்க அதிகாரிகள் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் போராட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உயரதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நகராட்சிகளின் நெல்லை மண்டல நிர்வாக இயக்குநர் மோகன் தலைமையில் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கோ வில்பட்டி நகராட்சி குடிநீர் திட்டத்தை வரும் 27ம் தேதி அன்று மாநில அளவிலான ஒப்புதல் குழுவின் ஒப் புதல் பெற்று புதிய குடிநீர் திட்டம் ஏற்றுக் கொள்ளப் படஉள்ளது என்று அதிகா ரிகள் தெரிவித்தனர். இதை யனைடுத்து உண்ணாவிர தம் போராட்டம் வாபஸ் பெறபட்டது.