Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செயலற்று கிடக்கும் ரூ1கோடி குடிநீர்திட்டம்

Print PDF

தினகரன் 23.09.2010

செயலற்று கிடக்கும் ரூ1கோடி குடிநீர்திட்டம்

குன்னூர்,செப்.23: குன்னூர் அருகே ரூ.1 கோடியில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் திட்டம் செயலற்று கிடப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

குன்னூர் அருகே உள்ள உலிக்கல் பேரூராட்சி சார்பில் சேலாஸ் சுற்றுவட்டார மக்கள் நலன் கருதி கடந்த 2005ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கோடேரி& சேலாஸ் குடிநீர் திட்டம் ரூ.99.90லட்சத்தில் துவங்கப்பட்டு 2006ம் ஆண்டு நிறைவு பெற்றது. கோடேரியில் இருந்து சேலாஸூக்கு 4 அங்குல விட்டமுள்ள குழாய் மூலம் குடிநீர் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. ஆனால் குடிநீர் குழாய்கள் முறையாக பொருத்தப்படாததால் இத்திட்டம் செயலற்று போய் உள்ளது. இதுகுறித்து விரிவான விளக்கம் தருமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பேரூராட்சி நிர்வாகம், தற்போது 2 அங்குல அளவில் குடிநீர் வந்து கொண்டிருப்பதாகவும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அகலப்படுத்துவதுடன், கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் போது சன்னிசைடு என்ற இடத்தில் உள்ள பிரதான தடுப்பணையின் குழாய்கள், தாங்கும் தூண்கள் சேதம் அடைந்தன. இது குடிநீர் வடிகால் வாரியம் மூலம் விரைவில் சீரமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆனால் இத்திட்டம் செயல்படுத்திய காலக்கட்டத்தில் இருந்தே இன்று வரை சேலாஸ் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முறையாக திட்டமிடாததால் இப்பணியில் குளறுபடி ஏற்பட்டு அரசு பணம் விரயமாகி உள்ளதாகவும், இதை நிவர்த்தி செய்யும் வகையில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேலாஸ் பகுதி மக்களுக்கு விரைந்து குடிநீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.