Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் வினியோகம் நகராட்சி தலைவி உறுதி

Print PDF

தினகரன் 29.09.2010

குடிநீர் வினியோகம் நகராட்சி தலைவி உறுதி

கூடலூர், செப்.29: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஐயன்காவு பகுதியில் கடந்த 1 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி இப்பகுதி மக்கள் நேற்று கூடலூர் நகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடந்த வந்தனர்.

தங்கள் பகுதியில் கிணறு, பம்ப், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக நிரந்தர பொருத்துனர் இல்லாததால் அடிக்கடி குடிநீர் வினியோகம் தடைபட்டது. தற்போது பணியாற்றி வருபவர் கடந்த 1 மாதமாக விடுப்பில் சென்று விட்டார். இதனால் குடிநீர் வினியோகம் சரி செய்யப்படவில்லை. அன்றாட குடிநீர் தேவைக்கு மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நிரந்தர பொருத்துனரை நியமிக்க கோரி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். கூடலூர் நகராட்சி தலைவர் அன்னபுவனேஸ்வரி பேச்சு நடத்தினார்.

அப்போது குடிநீர் பிரச்னை குறித்து இதுவரை புகார் வரவில்லை. உடனடியாக குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் போராட்டம் நடத்த தேவையில்லை என்றார். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.