Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் குழாய் வழி இணைப்புகளால் தொண்டிக்கு குடிநீர் செல்வதில் தடை

Print PDF

தினமலர் 30.09.2010

குடிநீர் குழாய் வழி இணைப்புகளால் தொண்டிக்கு குடிநீர் செல்வதில் தடை

தொண்டி : "தொண்டி பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய் வழிகளில் 32 இணைப்புகள் கொடுக்கபட்டதால், தொண்டிக்கு குடிநீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது ,'என, கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

தொண்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் பாலுச்சாமி தலைமையில் நடந்தது. துணைதலைவர் தியாகராஜன், செயல்அலுவலர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டனர். கவன்சிலர்கள் விவாதம்:

அயூப்கான்: தொண்டி மருத்துவமனை ,வெள்ளைமணல் தெரு சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது.

செயல்அலுவலர்: தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கபடும்.

தலைவர்: காவிரி நீர் வராததால் தண்ணீர் கஷ்டம் ஏற்பட்டுள்ளது.

செயல்அலுவலர்: பேரூராட்சி சார்பில் கொடுக்கபட்டுள்ள குடிநீர் இணைப்புகளில் பலர் கட்டண தொகை செலுத்தாமல் உள்ளனர்.

ராஜகோபால்:குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என்றால் இணைப்பை துண்டியுங்கள் .
அயூப்கான்: மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது.

காளிதாஸ்: மின்வாரிய அலுவலர்களிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. அலுவலரிடம் புகார் செய்தபோது, நான் அ. தி.மு..,வை சேர்ந்தவன். முடிந்ததை பார்த்து கொள் என்கிறார்.

செயல்அலுவலர்: வாரம்தோறும் திங்கள்கிழமை கலெக்டர் தலைமையில் நடக்கும் மக்கள் குறைதீர் நிகழ்ச்சியில் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கபடும்.

சவுந்தரபாண்டியன்:திருவாடானை அருகே கோவனி, ஆட்டூர் கிராமத்திலிருந்து தொண்டி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தபடுகிறது. இதற்கு வரும் வழிகளில் குழாயை துண்டித்து அதிகாரிகளின் துணையுடன் 32 இடங்களில் குடிநீர் இணைப்பு வழங்கபட்டுள்ளது. இவ்வளவு இணைப்பு இருந்தால் தொண்டிக்கு எப்படி தண்ணீர் வரும்.

செயல்அலுவலர்: நடவடிக்கை எடுக்கபடும்.

ரேவதி: வெள்ளைமணல் தெரு வாறுகாலில் கோழி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றமாக உள்ளது.

செயல்அலுவலர்: இறைச்சி கடைகளில் இருந்து கொட்டபடும் கழிவுகளை அகற்றபடும்.

தலைவர்: பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இருந்தால் தான் கவுன்சிலர்கள் குறைகளை கூற முடியும். அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயல்அலுவலர்: இனி வரும் கூட்டங்களில் அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ள வலியுறுத்தபடும்,என்றார்