Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வள்ளியூரில் 33 ஆண்டுகளுக்கு பின்னர் குடிநீர் இணைப்பு பணி துவக்கம்

Print PDF

தினகரன் 21.10.2010

வள்ளியூரில் 33 ஆண்டுகளுக்கு பின்னர் குடிநீர் இணைப்பு பணி துவக்கம்

வள்ளியூர், அக். 21: வள்ளியூர் சிறப்பு நிலை பேருராட்சி நெல்லை மாவட்டத்தில் உள்ள அதிக வருமா னம் வரக்கூடிய பெரிய பேரூராட்சிகளில் ஒன்றாகும். இங்கு கடந்த 1977ம் ஆண்டு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நம்பியாறு திட்டத்தின் மூலம் 2400 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் சுமார் 33 ஆண்டுகளாக வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. வள்ளியூர் பேரூராட்சியில் தற்போது 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளும் சுமார் 35 ஆயிரம் மக்களும் உள்ள னர். இங்கு தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம், கொடுமுடியாறு குடிநீர் திட்டம், உள் ளூர் குடிநீர் திட்டமான நம்பியான்விளை ஆழ்குழாய் கிணறு, ஊற்றடி ஆழ்குழாய்கிணறு மற்றும் 60க்கும் மேற் பட்ட சிறியகுடிநீர் திட்டங்க ளும் நிறைவேற்றப்பட்டுள் ளன.

புதியதாக 1500 வீட்டு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காகவே கடந்த 2003ம் ஆண்டு ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் கொடுமுடியாறு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இத்திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் வள்ளியூர் நகருக்குள் கொண்டு வரமுடிந்தது. இதனை தொடர்ந்து வள்ளியூர் நகரம் முழுவதும் சிறப்பு பொதுநிதியிலிருந்து குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து வள்ளியூர் பேரூராட்சி தலைவர் சங்கரநாராயணன் கூறுகையில், "வள்ளியூரில் தற்போது தெருக்களில் குடிநீர் குழாய் கள் அமைப்பதற்காக நம்பி யான் விளை என்ற இடத்திலிருந்து ஆழ்குழாய் அமைக்கப்பட்டள்ளது. இங்கு நல்ல குடிதண்ணீர் ஆதாரம் இருப்பதால் சுமார் 600 பொது குடிதண்ணீர் குழாய்கள் தெருக்களில் அமைக்க பணி கள் தற்போது நடைபெறுகி றது. பணிகள் முடிந்தவுடன் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். பேருராட்சி அலுவலகத் தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். கட்டணங்கள் வங்கிகளில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

வள்ளியூரில் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மர்மம் என்ன?

1977ம் ஆண்டு 6 லட்சம் கொள்ளளவுள்ள நீர்தேக்க தொட்டி மூலம் வள்ளியூரில் 2400 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு வள்ளியூரில் கட்டப்பட்ட ஏராளமான நீர்த்தேக்க தொட்டி மூலம் 23 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. இதன் மூலம் வள்ளியூரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க போதிய நீர் ஆதாரம் உள்ளது. மேலும் தற்போது நம்பியான் விளை ஒட்டிய குளக்கரையில் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க ஏதுவாக 4 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இதனால் போதுமான நீர் ஆதாரம் வள்ளியூரில் இருக்கிறது. ஆனால் இவ்வளவு ஆண்டு காலம் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்காததின் மர்மம்தான் யாருக்கும் புரியாத புதிராக உள்ளது.

Last Updated on Thursday, 21 October 2010 08:42