Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாந்தோணி நகராட்சியில் புதிய குடிநீர் திட்டம் மக்கள் பங்களிப்பு ரூ3.40 கோடி

Print PDF

தினகரன் 21.10.2010

தாந்தோணி நகராட்சியில் புதிய குடிநீர் திட்டம் மக்கள் பங்களிப்பு ரூ3.40 கோடி

கரூர், அக்.21. தாந்தோணி நகராட்சியில் புதிய குடிநீர் திட் டத்திற்கு நகராட்சி, பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ரூ3.40கோடி செலுத்தப்பட உள்ளது. தாந்தோணி நகராட்சியின் மக்கள் தொகை 61,963. மக்கள் தொகையானது 2025ம் ஆண்டில் 83,000 மாகவும், 2040ல் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உயரக்கூடும் என புள்ளி விவரங்களின்படி எதிர்பார்க்கப்படு கிறது. தற்போது தாந்தோணி நகராட்சிக்கு காவிரி குடிநீர் கட்டளை நீர்உறிஞ்சு நிலையத்தில் இருந்து நாள்ஒன்றுக்கு 4.22 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மக்கள் தொகை வளர்ச்சியை கருத்தில் கொ ண்டு புதிய குடிநீர் திட்டம் ரூ25.16 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்திற்காக நகராட்சி பகுதியில் 7இடங்களில் ஒரு லட்சம் மற்றும் ஒன்னரை லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட உள்ளன. ஏற்கனவே, நகராட்சியில் பயன்பாட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் அளவு 13.50லட்சம் லிட்டர். புதிதாக அமைக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் கொள்ளளவு 47லட்சம் லிட் டர். சீரான குடிநீர் விநியோகத்தை ஏற்படுத்துவதற்காக 14குடிநீர் விநியோக பகுதிகள் என பிரிக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின்கீழ் திண்ணப்பா நகர் பகுதியில் 10லட்சம் லிட்டர், காந்திகிராமம், செல்லாண்டிபாளையம், தோரணக்கல்பட்டி பகுதியில் தலா 5லட்சம் லிட்டர், மூலக்காட்டானூரில் ஒருலட்சம் லிட்டர் கொள்ளளவிலும் கட்டப்பட உள்ளது. புதிய குடிநீர் திட்டத்திற்கு, நகர்ப்புற நிதியகம் சென்னை (டிஎன்யுடிஎப்) குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணியினை நடைமுறைப்படுத்தி திட்டப்பணியை செயல்படுத்தவும், பெறப்படும் கடன் தொகையினை திருப்பி செலுத்த விதிகள் நிபந்தனைகளை தெரிவித்துள்ளது. நகராட்சி மற்றும் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ3.40கோடி செலுத்தப்பட இருக்கிறது. இத்தொகையை செலுத்துவதற்கு தாந்தோணி நகர்மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.