Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் கசிவு அறிய ‘ஸ்கேடா’ திட்டம் இன்று ஆலோசனை குழு கூட்டம்

Print PDF

தினகரன் 22.10.2010

குடிநீர் கசிவு அறிய ஸ்கேடாதிட்டம் இன்று ஆலோசனை குழு கூட்டம்

கோவை, அக். 22: கோவை மாநகராட்சியில் குடிநீர் கண்காணிப்பு, கசிவு அறிய ஸ்கேடா என்ற தொழில்நுட்ப திட்டம் செயல்படுத்தப்படும்.

கோவை மாநகராட்சி யில் பில்லூர் 2வது குடிநீர் திட்டம் 140 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது.

இந்த குடிநீர் திட்டத் தில், குடிநீர் விநியோகம், கண்காணிப்பு, கசிவு அறி யும் தொழில்நுட்பம் (ஸ்கே டா) பயன்படுத்தப்படவுள் ளது. இதற்கென 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு தனது பங்களிப்பாக 4 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

2 கோடி ரூபாய் மாநக ராட்சி நிர்வாகம் தன் பங்களிப்பாக செலுத்தவுள் ளது. விரைவில் ஸ்கேடா தொழில்நுட்பம் செயல்படுத்த டெண்டர் விடப்படவுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக ஆலோசனை குழுவின் கூட்டம் மாநகராட்சியில் இன்று நடக்கிறது. இதில் திட்ட நடை முறை குறித்து விவாதிக்கப்படும்.

ஸ்கேடா திட்டத்திற் காக மாநகராட்சி அலுவலகத்தில் தனிபிரிவு துவக்கப்படும். பில்லூர் 2வது குடி நீர் திட்டத்தில் தினமும் பெறப்படும் குடிநீர் அளவு, நிமிடம் வாரியாக கண்ட றிய முடியும்.

பில்லூர் அணையில் குடிநீர் எடுப்பது, வெள்ளியங்காட்டில் சுத்திகரிப்பது, கட்டன் மலை, பெரிய கோம்பை மலையில் குகை பாதையில் குடிநீர் அனுப்புவது, ரயில் பாதை, ரோடு, காடு வழியாக குழாய் மூலமாக பாயும் குடிநீர், குடிநீர் கசிவு, அதிக நீர் அழுத்தம், நீரின் வேகம், மின் அளவு போன்றவற்றை துல்லியமாக கண்காணிப்பு அறையிலிருந்து கண்டறிய முடியும்.

பில்லூர் அணையில் குடிநீர் எடுப்பது, வெள்ளியங்காட்டில் சுத்திகரிப்பது, கட்டன் மலை, பெரிய கோம்பை மலையில் குகை பாதையில் குடிநீர் அனுப்புவது, ரயில் பாதை, ரோடு, காடு வழியாக குழாய் மூலமாக பாயும் குடிநீர், குடிநீர் கசிவு, அதிக நீர் அழுத்தம், நீரின் வேகம், மின் அளவு போன்றவற்றை துல்லியமாக கண்காணிப்பு அறையிலிருந்து கண்டறிய முடியும்.

கோவை மாநகராட்சிக்கு பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில் தினமும் 6.5 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படவுள் ளது. இந்த குடிநீர் ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு கொண்டு வரப்படும். பின்னர் மாநகர் பகுதியில் குடிநீர் தொட்டிக ளுக்கு பகிர்ந்து வழங்கப்படும். ஒவ்வொரு தொட்டிக்கும் வழங்கப்படும் குடிநீர் அளவு, குடிநீரில் கலக்கப்படும் குடி நீர் அளவு எளிதாக கண்டறியப்படும். ரிமோட் மூலம் குடி நீர் அளவை கட்டுப்படுத்த முடியும். குடிநீர் வால்வுகளை திறக்க, மூட ரிமோட் கண்ட் ரோல் செயல்முறை நடைமுறைப்படுத்த முடியும். குழாய் உடைப்பை முன்கூட்டியே தடுக்க ஸ்கேடாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந் தால் குடிநீர் வீணாவதை 30 முதல் 50 சதவீதம் வரை தடுக்க முடியும்.

கோவை மாநகராட்சிக்கு பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில் தினமும் 6.5 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படவுள் ளது. இந்த குடிநீர் ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு கொண்டு வரப்படும். பின்னர் மாநகர் பகுதியில் குடிநீர் தொட்டிக ளுக்கு பகிர்ந்து வழங்கப்படும். ஒவ்வொரு தொட்டிக்கும் வழங்கப்படும் குடிநீர் அளவு, குடிநீரில் கலக்கப்படும் குடி நீர் அளவு எளிதாக கண்டறியப்படும். ரிமோட் மூலம் குடி நீர் அளவை கட்டுப்படுத்த முடியும். குடிநீர் வால்வுகளை திறக்க, மூட ரிமோட் கண்ட் ரோல் செயல்முறை நடைமுறைப்படுத்த முடியும். குழாய் உடைப்பை முன்கூட்டியே தடுக்க ஸ்கேடாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந் தால் குடிநீர் வீணாவதை 30 முதல் 50 சதவீதம் வரை தடுக்க முடியும். ஆண்டுதோறும் சுமார் 50 கோடி லிட்டர் குடிநீர் வீணா வது தடுக்கப்படும். நகர் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதை வெகுவாக தவிர்க்க முடியும்.