Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு ரூ79 கோடியில் குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன் 25.10.2010

கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு ரூ79 கோடியில் குடிநீர் திட்டம்

ஆரல்வாய்மொழி, அக்.25: ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட மிஷன் காம்பவுண்ட், தாணுமாலையன்புதூர் பகுதியில் ரூ13 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்ட துவக்கவிழா நேற்று நடந்தது.

விழாவில் புதிய குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசியதாவது:

ஆரல்வாய்மொழி பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக சட்டமன்ற தொகுதி மேம் பாட்டு திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக பெருமாள்புரம், தேவசகாயம் மவுண்ட் ஆகிய பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

அடுத்த கட்டமாக ஆரல்வாய்மொழி மிஷன் காம் பவுண்ட் பகுதியில் குடிநீர்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதர பகுதிக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக முதல்வர் கருணா நிதி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு எவ் வளவு நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர் என்பது உங்களுக்கு தெரியும். ஜாதி, மத, கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ79 கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. பணிகளை துணை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித் தார்.

நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் பியூலா பாக்கிய ஜெயந்தி, ஹெலன் டேவிட் சன் எம்.பி, பேரூராட்சி துணைத்தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் அம்பு ரோஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நெடுஞ்செழியன், வார்டு கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், மாலா, அன்ன ஜோதி, செல்வகுமார், ஏசு மணி, மணி, திமுக மாவட்ட பிரதிநிதி சந்திரன், லாரன்ஸ், தமிழ்ராஜ், பாலகிருஷ்ணன், ஜோசப், தோவாளை ஊராட்சி துணை தலைவர் தாணு ஆகியோர் கலந்துகொண்டனர். ஆரல்வாய்மொழியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை அமைச்சர் சுரேஷ்ராஜன் திறந்து வைத்தார். (அடுத்தபடம்) திறந்து வைக்கப்பட் குடிநீர் தொட்டி.