Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருமானூர் கூட்டு குடிநீர் திட்டம் தஞ்சையை இணைக்க வேண்டும் நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

Print PDF

தினகரன்               26.10.2010

திருமானூர் கூட்டு குடிநீர் திட்டம் தஞ்சையை இணைக்க வேண்டும் நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

தஞ்சை, அக்.26: தஞ்சை நகர் மன்றத்தின் சாதாரண கூட் டம் நேற்று நடந்தது. தலைவர் தேன்மொழி ஜெயபால் பேசியதாவது:

தஞ்சை நகர்மன்றம் பதவிஏற்று 4 ஆண்டுகள் முடிவடைந்து 5ம்ஆண்டு துவங்கியுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டதுபோல் இனிவரும் காலங்களிலும் ஒத்துழைக்க வேண்டும். பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக நடத்திய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி என்றார்.

தொடர்ந்து அதிமுக சித்ரா பேசும்போது, தஞ்சை யில் உலகத் தரம் வாய்ந்த சாலை அமைக்கப்படும் என்றீர்கள். ஆனால் உள்ளூர் தரத் தில் கூட இதுவரை சாலைகள் போடப்படவில்லை. ஒரு நபர் டெண்டரை அனுமதித்து ஏன்? என்றார். ஆணையர் நடராஜன், பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி பணிகளை விரைந்து முடிப்பதற்கே ஒரு நபர் டெண்டருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடி க்க முடியவில்லை. தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பணிகள் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து தகவல்களையும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என்றார்.

அதிமுக சாமிநாதன் மற் றும் சாவித்திரி ஆகியோர் பேசியபோது, பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டுவிழாவையொட்டி ஒரு சில இடங்களில் போடப்பட்ட சாலை கள் தரமானதாக இல்லை. சீனிவாசபுரம், பெரியகோயில் பகுதிகளில் போடப்பட்டுள்ள சாலைகள் ஒரு மாத்திற்குள்ளாகவே பெயர்ந்து வந்துவிட்டது என்றார்.

ஆணையர் நடராஜன், சாலைகள் அமைக்கப்பட்டு ள்ள பணிகள் உள்ளி¢ட்ட பல் வேறு பணிகள் குறித்து சென்னையிலிருந்து அதிகாரிகள் குழுவினர் வந்து ஆய்வு நடத்தினர். பணிகள் குறிப்பிட்ட படி தரமாக உள்ளதாக அவர்களும் சான்றளித்துள்ளனர் என்றார்.

திமுக குமார், தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலயில் சோடியம் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் சார்பில் நன்றி. அதே நேரத்தில் சிமென்ட் சாலைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டும் இது வரை பணிகள் தொடங்கப்படவில்லை. மற்ற பகுதிகளில் தார் சாலைப் பணிகளும் கிட ப்பில் போடப்பட்டுள்ளன. அரசிடமிருந்து நிதி பெற்று உடன் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

திமுக கவுன்சிலர் இறை.கார்குழலி, திருமானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தஞ்சை நகரையும் இணைக்க அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என் றார்.

அதிமுக ராஜேஸ்வரன், சிறப்பு சாலை திட்டத்தில் நகராட்சிகளை மேம்படுத்த தமிழக அரசு ரூ100 கோடி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்தின்கீழ் தஞ்சை நகராட்சிக்கு மட்டும் இது வரை நிதி பெறாதது ஏன் என்றார். கமிஷனர் நடராஜன், இத்திட்டத்திற்காக ரூ19.66 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதில் ரூ3.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி கிடைக்கப்பெற்றவுடன் ஓரிரு நாட்களில் பணி மேற்கொள்ளப்படும் என்றார்.