Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பில்லூர் 2வது குடிநீர் திட்டம் மார்ச் இறுதியில் குடிநீர் விநியோகம்

Print PDF

தினகரன்               29.10.2010

பில்லூர் 2வது குடிநீர் திட்டம் மார்ச் இறுதியில் குடிநீர் விநியோகம்

கோவை, அக்.29: பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்ட பணி 80 சதவீதம் முடிந்தது. வரும் மார்ச் இறுதியில் குடி நீர் விநியோகிக்கப்படும்.

கோவை மாநகராட்சியில், பில்லூர் 2வது குடிநீர் திட்டம் 113.74 கோடி ரூபாய் செலவில் துவங்கியது. திட்ட பணி தாமதம் மற்றும் கட்டுமான பொருள் விலையேற்றம் கார ணமாக திட்ட தொகை மே லும் 27 கோடி ரூபாய் உயர் ந்தது. 4 ஆண்டிற்கு முன்பே, திட்ட பணி துவங்கியது. பல்வேறு காரணங்களின் பணி முடங்கியது. தற்போது, திட்டத்தின் அனைத்து பகுதி (பேக்கேஜ்) பணிகளும் வேகமாக நடக்கிறது.

தண்ணீர் ததும்ப காட்சி அளிக்கும் பில்லூர் அணை. உள்படம்: பில்லூர் 2வது கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பார்வையிட்டார். அருகில் கலெக்டர் உமாநாத், மாநகராட்சி ஆனையாளர் அன்சுல் மிஸ்ரா, மேயர் வெங்கடாசலம், துனை மேயர் கார்த்திக், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள்.

கோவை மாநகராட்சியில், பில்லூர் 2வது குடிநீர் திட்டம் 113.74 கோடி ரூபாய் செலவில் துவங்கியது. திட்ட பணி தாமதம் மற்றும் கட்டுமான பொருள் விலையேற்றம் கார ணமாக திட்ட தொகை மே லும் 27 கோடி ரூபாய் உயர் ந்தது. 4 ஆண்டிற்கு முன்பே, திட்ட பணி துவங்கியது. பல்வேறு காரணங்களின் பணி முடங்கியது. தற்போது, திட்டத்தின் அனைத்து பகுதி (பேக்கேஜ்) பணிகளும் வேகமாக நடக்கிறது.

திட்ட பணிகளை தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனி சாமி, கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத், கோவை மாநகராட்சி கமிஷனர் அன் சுல் மிஸ்ரா, மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், மாநகராட்சி மேற் பார்வை பொறியாளர் பூபதி, மின் வாரிய தலைமை பொறியாளர் தங்கவேலு, மாநகராட்சி செயற்பொறியாளர் லட்சுமணன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் உதயகுமார், பணிக்குழு தலைவர் ராமசாமி மற்றும் பலர் நேற்று பார்வையிட்டனர். பில்லூர் அணை அருகே 13.80 கோடி ரூபாய் செலவில் நீர் சேகரிப்பு கிணறு தோண்டும் பணி நடக்கிறது. 30 மீட்டர் ஆழத்திற்கு கிணறு தோண்டவேண்டும்.

ஆனால், இதுவரை 15 மீட்டர் மட்டுமே கிணறு தோண்டப்பட்டுள்ளது. கடின மான பாறை இருப்பதால், வெடி வைத்து, அணையின் தாங்கு சுவருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணி நடத்தப்படுகிறது.

மார்ச் முதல் வாரத்தில் இந்த பணி நிறைவடையும். தற்போது 50 சதவீத பணி மட்டுமே நிறைவடைந்துள் ளது.

பணி முடிந்து, கிணற்றின் உட்பகுதியில் கான்கிரீட் சுற்றுசுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடின பாறையால் பணியை வேக மாக நடத்துவதில் சிக்கல் இருக்கிறது.

வெள்ளியங்காட்டில் 28.60 கோடி ரூபாய் செலவில் நீர் சுத்திகரிப்பு தொட்டி கட்டும் பணி 90 சதவீதம் முடிந்தது. 1.95 கோடி ரூபாய் செலவில் பெரியகோம்பை நீர் வழிபாதை (டணல்) பணி முடியும் நிலையை எட்டி விட்டது.

கட்டன் மலை நீர் வழி பாதை, நீர் எடுப்பு பணி (திட்ட மதிப்பீடு 19.93 கோடி ரூபாய்) 90 சதவீதம் முடிந்தது. ராமகிருஷ்ணாபுரத்தில் 30 லட்சம் நீர் தேக்க கொள்ள ளவு கொண்ட குடிநீர் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி நடக்கிறது. இந்த பணி 80 சதவீதம் முடிந்து விட்டது.

மேலும், குடிநீர் பிரதான குழாய் பதிப்பு பணி, ரயில் பாதை வழியாக மண் உந்துதல் முறை (டிரன்ச்லெஸ் மெத்தட்) குழாய் பதிப்பு பணி நடக்கிறது. இதனை அமைச்சர், மேயர், அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், " பில்லூர் 2வது குடிநீர் திட்ட பணிகள் மொத்தமாக 80 சதவீதம் முடிந்தது.

மார்ச் இறுதி வாரத்தில் குடிநீர் பணிகள் நிறைவடை யும். நீர் சேகரிப்பு கிணறு தோண்டும் பணி துவங்க தாமதமாகி விட்டது. இந்த பணி விரைவாக முடியும் என நினைக்கிறோம்.

பணி முடிந்ததும், மார்ச் இறுதி வாரம் குடிநீர் விநி யோகம் செய்யப்படும். தின மும் 6.5 கோடி ரூபாய் குடிநீர் மாநகர் பகுதிக்கு தடையின்றி வழங்கப்படும். இதற்காக பில்லூர் அணை யில் 3 மெகா மின் மோட்டார் அமைக்கப்படும்.

24 மணி நேரமும் குடிநீர் பெறப்படும். இதுவரை நகரில் 4 நாளுக்கு ஒரு நாள் குடிநீர் என்ற நிலையிருக்கிறது.

பில்லூர் 2வது குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் தினமும் குடிநீர் வழங்கப்படும். குடிநீர் பற்றாக்குறை நிலை ஏற்படாது, " என்றனர்.