Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தினமும் குடிநீர் வினியோகம் திட்டம்:உள்ளாட்சி தினத்தில் மக்களுக்கு அர்ப்பணிப்பு சூப்பர்

Print PDF

தினமலர்          01.11.2010

தினமும்  குடிநீர் வினியோகம் திட்டம்:உள்ளாட்சி தினத்தில் மக்களுக்கு அர்ப்பணிப்பு சூப்பர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், இன்று முதல் தினமும் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு அர்ப்பணிப்பு செய்கிறது. பொள்ளாச்சி நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக கடந்த 1948ல் முதல் குடிநீர் திட்டம் துவங்கப் பட்டது. அதன்பின் நகராட்சியில் குடியிருப்புகளின் எண்ணிக்கையும், மக்கள் தொகையும் அதிகரித்ததால் இரண்டாம் மற்றும் மூன்றாவது குடிநீர் திட்டம் கொண்டு வரப் பட்டது. ஆழியாறு ஆற்றில் அம்பராம்பாளையம் நீரேற்று நிலையத்தில் இருந்து கொண்டு வரப்படும் சுத்தகரிக்கப்பட்ட தண்ணீர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும் பகிர்ந்து வினியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு நீங்காததால், குடிநீர் மேம்பாட்டு திட்டத்தை நகராட்சி நிர்வாகம் கொண்டு வந்தது. புதிய குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்காக நகராட்சி நிர்வாகம் 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தில் சோமசுந்தராபுரம் லே-அவுட்டில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டு மேல்நிலை தொட்டியும், வி.கே.வி., லே-அவுட்டில் ஐந்து லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியும், கே.ஆர்.ஜி., நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியும் கட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே குடிநீர் திட்ட மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகளுடன், புதிய மேல்நிலைத்தொட்டிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் தினமும் 140 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் வினியோகம் செய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளது. குடிநீர் திட்டத்தின் அனைத்து மேம்பாட்டு பணிகளும் நிறைவடைந்துள்ளதால், நகராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கு தினமும் குடிநீர் வழங்கும் முறை பரிச்சார்த்த முறையில் அமல்படுத்தப்பட்டது. குடிநீர் திட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால், இன்று (1ம் தேதி) முதல் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்கான பணிகளை நகராட்சி கமிஷனர் பூங்கொடி அருமைக்கண், பொறியாளர் மோகன் ஆகியோர் செய்து வருகின்றனர். நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி கூறியதாவது:

பொள்ளாச்சி நகராட்சியில் தற்போது ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். மக்கள் தொகை அடிப்படையில் குடிநீர் மேம்பாட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிநீர் திட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால் இன்று முதல் தினமும் ஒன்னரை மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியில் 12,130 வீட்டு குடிநீர் இணைப்புகளும், 280 பொதுக்குடிநீர் குழாய்களும் உள்ளன. புதிய குடிநீர் திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். இன்னும் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. அதனால், புதிதாக வீட்டு குடிநீர் இணைப்பு வேண்டுவோர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்திலேயே பொள்ளாச்சி நகராட்சியில் மட்டுமே தினமும் சுத்திகரிக்கப்பட்ட நீர் வினியோகம் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். நவீன தொழில்நுட்பம்:

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "பொள்ளாச்சி நகராட்சியில் குடிநீர் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. குடிநீர் கசிவு ஏற்படுவது கண்டுபிடிக்கபடாததால் பெரிய உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வந்தது. தற்போது, குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகளை கண்டறிய, 12 லட்சம் ரூபாய் செலவில் நடமாடும் குடிநீர் கசிவு கண்டறியும் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட இந்த வாகனம் பொள் ளாச்சி உள்பட ஏழு இடங்களில் மட்டுமே உள்ளது. குடிநீர் குழாயில் ஏற்படும் கசிவுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும் தன்மை கொண்டுள்ளது. இதன்மூலம் குடிநீர் குழாயில் கசிவு ஏற் பட்டால் உடனுக்குடன் சீரமைத்து வினியோகம் சீராக்கப்படும்' என்றனர்.