Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோடு மாநகராட்சிக்கு ரூ. 250 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

Print PDF

தினமணி                 02.11.2010

ஈரோடு மாநகராட்சிக்கு ரூ. 250 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

ஈரோடு, நவ. 1: மாநகராட்சிப் பகுதியில் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக ரூ. 250 கோடி மதிப்பில் புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தா.சவுண்டையா தெரிவித்தார்.

÷ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தினவிழா மேயர் குமார் முருகேஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி சாதனை விளக்க வாகன ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் தா.சவுண்டையா தொடங்கி வைத்தார் (படம்). கணேசமூர்த்தி எம்.பி., எம்எல்ஏ என்.கே.கே.பி.ராஜா, மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன், பொறியாளர்கள் வடிவேல், ஆறுமுகம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

÷மாவட்ட ஆட்சியர் தா.சவுண்டையா பேசியது: தமிழக அரசு உள்ளாட்சி அமைப்பு மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வருகிறது. குடிநீர், சாலை, தெருவிளக்கு, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ளது.

÷ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு ரூ. 250 கோடி செலவில் ஊராட்சிக் கோட்டை கூட்டுக் குடிநீர்த் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.