Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குளங்களை மேம்படுத்தும் பணி திருப்போரூரில் தீவிரம்

Print PDF

தினமலர்                  08.11.2010

குளங்களை மேம்படுத்தும் பணி திருப்போரூரில் தீவிரம்

திருப்போரூர் : திருப்போரூர் பேரூராட்சியில், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 10 குளங்களை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது.

பேரூராட்சி பகுதியில் உள்ள நல்லான்செட்டிகுளம், மார்க்கெட் குளம், மடம் குளம், வத்திநீர் குளம், சந்திரகுளம், குயவன்குட்டை, காலவாக்கம் கங்கைஅம்மன் குளம், பழண்டியம்மன் கோவில் குளம், மேட்டுக்குப்பம் கிராம சடை குட்டை, அபிராமிநகர் குளம் ஆகியவற்றை ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைத்து, சுற்றுச்சுவர் அமைக்க பேரூராட்சி கடந்த ஜூலை மாதம் தீர்மானித்தது.

அதன்பின் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது. காலவாக்கம் பகுதியில் உள்ள குளங்கள் சீரமைப்பு பணி முடிந்துள்ளது. ஏற்கனவே குடிநீர் ஆதாரத்தை பெருக்க, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கிணறுகள் ஏற்படுத்தியதன் மூலம் பேரூராட்சி பகுதியில் தினமும் குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. கனிமவளம் என்ற பெயரில் காலிகுட்டைகள், ஏரிகள் அரசியல்வாதிகளின் சிபாரிசு குத்தகைதாரர்களால் சுரண்டப்பட்டு வரும் நிலையில், பேரூராட்சி குளங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.