Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவில்லிபுத்தூரில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

Print PDF

தினகரன்                        10.09.2010

திருவில்லிபுத்தூரில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

திருவில்லிபுத்தூர், நவ. 10:மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையால் திருவில்லிபுத்தூரில் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி மேலாளர் கூறினார். மழைக்காலம் என்பதால் குடிநீரை சுட வைத்து குடிக்க வேண்டு மென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

திருவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போதிய மழையின்மையால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் நகரில் குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகள், செண்பகத்தோப்பு பேயனாற்று பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. துவக்கத்தில் 3, 4, 5, 7 நாட்களுக்கு ஒருமுறை என சப்ளை செய்யப்பட்ட குடிநீர் தொடர் வறட்சியால் சில மாதங்களாக 10 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டது. குளங்கள், கண்மாய்களில் தண்ணீர் வற்றியதால் வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. டிராக்டரில் கொண்டு வந்து விலைக்கு விற்கப்பட்ட குடிநீரை நீண்ட வரிசையில் மக்கள் நின்று வாங்கி பயன்படுத்தினர். வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் டிராக் டர் தண்ணீரை நம்பியே தொழில் செய்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்தது. இதன் மூலம் திருவில்லிபுத்தூர் நகருக்கு குடிநீர் வழங்கும் பேயனாறு, அழகர்கோவில், பேச்சியம்மன் கோவில் பின்புறமுள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

இதுகுறித்து திருவில்லிபுத்தூர் நகராட்சி மேலாளர் அப்துல் ரஷீத் நிருபர்களிடம் கூறியதாவது: நிலத்தடி நீர்மட்டம் குறைவால் நிலவிய தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த 3 மாதங்களாக 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. தற்போது ஓடைகளில் தண்ணீர் ஓடுவதையடுத் நகராட்சி பகுதியில் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மழையின் அளவை பொறுத்து 3 நாட்களுக்கு ஒருமுறை அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் என குடிநீர் சப்ளை செய்ய வாய்ப்புள்ளது.

மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் என்பதால் நோய் தடுப்பு மருந்து கலந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.