Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோத்தகிரி மக்கள் எதிர்பார்ப்பு குடிநீர் பற்றாக்குறை போக்க உடனடி நடவடிக்கை தேவை

Print PDF

தினகரன்                11.11.2010

கோத்தகிரி மக்கள் எதிர்பார்ப்பு குடிநீர் பற்றாக்குறை போக்க உடனடி நடவடிக்கை தேவை

குன்னூர், நவ.11: கோத்த கிரி நகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி நகரின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 1972ம் ஆண்டு ஈளாடாவில் பேரூ ராட்சி நிர்வாகம் சார்பில் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் மூலம் ரூ.20 லட்சம் கடன் பெற்று தடுப்பணை கட்டப்பட்டது.

தடுப்பணைக்கு வரும் நீரை கேர்பெட்டா புதூர் பகுதியிலுள்ள பம்ப் ஹவு சில் சுத்திகரித்து சக்திமலை குடிநீர் தேக்க தொட்டியில் சேமித்து பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. அப்போது இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் தடுப்பணை கட்டப்பட் டது. ஆனால் நாளிடைவில் மக்கள் தொகை அதிகரிப்பு, குடிநீர் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக தற்போது அடிக்கடி குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. தடுப்பணையில் வீணாகும் நீரை சேமித்து மக்களுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மாற்று குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தடுப்பணையில் குடிநீர் குழாய்கள் இணைக்கப்பட்டு குடிநீர் வினியோக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.ஆனால் குழாய்கள் முறையாக பதிக்காததால் இத்திட்டம் பயன் அளிக்கவில்லை. கோத்தகிரி நகரில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க அளக்கரை குடிநீர் திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான தீர்மானமும் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட் டது. திட்டத்தை நிறைவேற்ற செலவாகும் ரூ.4 கோடியில் ஒரு பங்கினை பேரூராட்சி நிர்வாகம் செலுத்த வேண் டும் என்று குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்தது.

ஆனால் பேரூராட்சியில் நிலவும் நிதி பற்றாக்குறை காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. அளக்கரை குடிநீர் திட்டத்தை நடப்பாண்டு செயல்படுத்த சமீபத்தில் மாவட்டத்திற்கு வந்திருந்த துணை முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. திட்டத்தை நிறைவேற்ற தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உறுதியளித்துள்ளார்.

எனவே இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் கோத்தகிரி நகர மக்களுக்கு தடையற்ற குடிநீர் வினியோகம் சாத்தியமாகும் என்று நம்பப்படுகிறது.

மேலும் ஈளாடா அணையை தூர் வாரி வீணாகும் நீரை சேமிக்க நடவடிக்கை எடுத்தால் பொதுமக்கள் அதிகம் பயன் பெறுவர் என்று பொதுமக்கள், அதிகாரிகள் கூறி வருகின்றனர்.