Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செஞ்சியில் ரூ15 கோடியில் புதிய குடிநீர் திட்ட பணி தீவிரம் பிப்ரவரி மாதம் குடிநீர் வினியோகம்

Print PDF

தினகரன்              24.11.2010

செஞ்சியில் ரூ15 கோடியில் புதிய குடிநீர் திட்ட பணி தீவிரம் பிப்ரவரி மாதம் குடிநீர் வினியோகம்

செஞ்சி, நவ. 24: செஞ்சியில் ரூ. 15 கோடியில் தென் பெண்ணை ஆற்றில் இருந்து செஞ்சிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்ட பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் ஒருமாதத்தில் இந்த பணிகள் முடிந்து பிப்ரவரி மாதத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வினி யோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செஞ்சி நகரில் குடிநீர் பற்றாக்குறை பல ஆண்டுகளுக்கு முன் இருந்து வந்தது. இதையடுத்து கடந்த 1992ம் ஆண்டு அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப ரூ.3 கோடியில் அனந்தபுரம், செஞ்சி, கூட்டு குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செஞ்சிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் மூலம் தான் இப்போதும் செஞ்சி நகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது பெருகியுள்ள வீடுகள் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு 1992ம் ஆண்டு அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் போதுமானவையாக இல்லை. இதனால் செஞ்சியில் மீண்டும் சமீபத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப புதிய குடிநீர் திட்டம் தொடங்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி, எம்.எல்., கண்ணன், பேரூராட்சி தலைவர் மஸ்தான் ஆகியோர் துணை முதல்வர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ. 15 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதன்மூலம் தென்பெண்ணை ஆற்றில்இருந்து செஞ்சிக்கு தனியாக தரம் வாய்ந்த குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. பின்னர் கடந்த 3 ஆண்டு களுக்கு முன் செஞ்சியில் நடந்த விழாவில் இத்திட்டத்துக்கான அடிக்கல்லை துணை முதல்வர் ஸ்டாலின் நாட்டி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து டெண் டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியது.

இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் விழுப்புரத்தில் நடக்கும் விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு இத்திட்டம் மூலம் குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைக்கி றார். இதனால் புதிய குடிநீர் திட்டத்துக்கான பணிகள் மிக விரைவாக நடந்து வருகிறது. தென்பென்ணை ஆற்றிலிருந்து குழாய் அமைக் கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ராட்சத குழாய்களை சாலையோர மாக அமைக்கும் தொழிலாளர்கள் அவற்றின் இணைப்பு களை சரியாக பொருத்தி வருகின்றனர். இப்பணி செஞ்சி அருகே அத்தியூர் வரை நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இப்பணிகள் முடிவடைந்து வரும் பிப்ரவரி மாதம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகத்தை துணை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கி றார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புதிய குடிநீர்த்திட்டத்தால் செஞ்சி நகர மக்களின் நீண்ட நாளைய கனவு நிறைவேறுவதுடன், இனி தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.