Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வல்லநாடு அருகே தூத்துக்குடிக்கு குடிநீர் வழங்கும் பைப் லைனில் உடைப்பு சீரமைப்பு பணிகளை அமைச்சர் ஆய்வு

Print PDF

தினகரன்                29.11.2010

வல்லநாடு அருகே தூத்துக்குடிக்கு குடிநீர் வழங்கும் பைப் லைனில் உடைப்பு சீரமைப்பு பணிகளை அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடி, நவ.29: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 139 வீடுகள் இடிந்துள்ளன. வல்லநாட்டில் இருந்து குடிநீர் கொண்டுவரும் 80 ஆண்டுகள் பழமையான ராட்சத குழாய் உடைந்தது. இதனை சீரமைக்கும் பணி போர்க் கால அடிப்படையில் நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் பைப் லைன் உடைந்தது. வல்லநாடு தலைமை நீரேற்றும் நிலையம் அருகே உள்ள மருதவாய்க்கால் பகுதி வழியாக இந்த பைப் லைன் தூத்துக்குடி செல் கிறது. இதில் 1930ல் அமைக்கப்பட்ட முதலாவது பைப் லைனில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டதால் அதிகப்படியான குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் தூத்துக்குடிக்கு குடிநீர் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.

உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படை யில் நடந்து வருகிறது. இதை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார். பணிகளை விரைவில் முடிக்கு மாறு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவர் உத்தரவிட்டார். மேயர் கஸ்தூரி தங்கம், இளநிலை பொறியாளர்கள் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் இருந்தனர்.

தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வரும் முதலாவது பைப் லைனில் வல்லநாடு அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் பீறிட்டு வெளியேறுகிறது. உள்படம்: சீரமைப்பு பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.