Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

61 ஆண்டுகால தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு

Print PDF

தினமணி          30.11.2010

61 ஆண்டுகால தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு

விருதுநகர், நவ. 29: தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டத்துக்கு ரூ. 597 கோடி மதிப்பில் துணை முதல்வர் மு..ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 61 ஆண்டுகாலமாக நிலவிவந்த தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வுகிடைத்துள்ளது என, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆலங்குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியது:

விருதுநகர் மாவட்டத்தில் கிடைப்பதெல்லாம் உப்புத் தண்ணீரும், சுண்ணாம்பு கலந்த தண்ணீரும்தான். குடிநீர் கிடைப்பதில் எவ்வளவு பிரச்னை உள்ளது என்று பெண்களுக்கு அதிகம் தெரியும்.

சுமார் 61 ஆண்டுகாலமாக இப்பகுதியில் குடிநீர்ப் பிரச்னை இருந்து வருகிறது. திமுக அரசின் முயற்சியால் தற்போது தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை இப்பகுதி மக்கள் பயன்படுத்த உள்ளனர்.

விருதுநகர் மட்டுமல்ல அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிக்கும் நல்ல தண்ணீர் கிடைக்க உள்ளது. மேலும் சில பகுதிக்கு இத்திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதியினருக்கும் குடிநீர் கிடைக்கும். இத் திட்டத்தை துணை முதல்வர் மு..ஸ்டாலினிடம் நாங்கள் கூறியதும் அதை ஏற்றுக்கொண்டு தற்போது இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

தாகம் தீர்க்க இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்ததற்காக வரும் தலைமுறையினரும் திமுக ஆட்சியை நன்றியோடு நினைத்துப் பார்ப்பார்கள் என்றார்.

முன்னதாக விருதுநகர் மாவட்டத்தின் கடந்த 4 ஆண்டுகால சாதனை மலரை துணை முதல்வர் மு..ஸ்டாலின் வெளியிட்டார். அதை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.