Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி கூட்டத்தில் தகவல் ஆலந்தூரில் ரூ67 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணி

Print PDF

தினகரன்                 02.12.2010

நகராட்சி கூட்டத்தில் தகவல் ஆலந்தூரில் ரூ67 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணி

ஆலந்தூர், டிச.2: ஆலந்தூர் நகரமன்ற கூட்டம் தலைவர் துரைவேலு தலைமையில் நடந்தது. ஆணையர் மனோகரன், இன்ஜினியர் மகேசன் முன்னிலை வகித்தனர்.

துணை தலைவர் சந்திரன் பேசுகையில், குடிநீர் அபிவிருத்தி பணிக்காக டெபாசிட் மற்றும் இணைப்பு தொகையை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றார். எதிர்கட்சி தலைவர் வெங்கட்ராமன், கவுன்சிலர்கள் குமார், கலா கலைவாணன் ஆகியோரும் இதை வலியுறுத்தினர்.

நகராட்சி தலைவர் துரைவேலு கூறுகையில், ‘ஆலந்தூரில் ரூ66.86 கோடி புதிய குடிநீர் திட்ட பணிக்கு மத்திய அரசு 35 சதவீதம், மாநில அரசு 15 சதவீதம், நகராட்சி 25 சதவீதம், டுபிக்சில் நிறுவனம் 25 சதவீதம் செலவிடுகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்ட பின் பராமரிப்பு பணிக்காக, ரூ3 ஆயிரமாக இருந்த டெபாசிட் தொகை ரூ5 ஆயிரமாகவும், மாதக் கட்டணம் ரூ50 ஆக இருந்ததை ரூ150 ஆக உயர்த்தி வசூலிக்கும்படி அரசு கடிதம் அனுப்பியுள்ளது. நலசங்கத்தினர், கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் மாநகராட்சியுடன் இணைந்த பிறகு அது பற்றி பரிசீலிக்கப்படும்என்றார்.