Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறுவாணி நீர் மட்டம் குறைகிறது நீர் பிடிப்பில் மழை ஓய்ந்தது

Print PDF

தினகரன்                 07.12.2010

சிறுவாணி நீர் மட்டம் குறைகிறது நீர் பிடிப்பில் மழை ஓய்ந்தது

கோவை, டிச.7: சிறுவாணி அணை நீர் மட்டம் குறைய துவங்கியது. நீர் பிடிப்பில் மழை ஓய்ந்தது. சிறுவாணி அணையின் நீர் மட்டம் 878.50 மீட்டர் (கடல் மட்ட உயர கணக்கின் படி). நேற்று அணையின் நீர் மட்டம் 874.91 மீட்டராக காணப்பட்டது. நேற்று முன் தினம் 874.92 மீட்டராக இருந்தது. அணையின் நீர் மட்டம் 2 மாதத்திற்கு பிறகு படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மட்டுமே அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 3 நாளாக மழை பெய்யவில்லை. நீரோடைகளில் வரும் நீர் வரத்து, 80 சதவீதம் வரை குறைந்து விட்டது.

அணை நிரம்ப, நீர் மட்டம் இன்னும் 3.6 மீட்டர் அளவிற்கு உயரவேண்டும். அணையின் நீர் தேக்க பரப்பு14.5 சதுர கி.மீ. கடந்த மாதத்தில், சிறுவாணி நீர் பிடிப்பில் 249 மி.மீ மழை பெய்தது. அணையின் நீர் மட்டம் கடந்த 45 நாளில், 14 செ.மீ அளவிற்கு உயர்ந் தது. இன்னும் மொத்தமாக 360 மி.மீ அளவிற்கு மழை பெய்தால் அணை நிரம்பி வழியும். மழை நின்று விட்டதால் அணை நிரம்பும் வாய்ப்பு குறைந்து விட்டது. சிறுவாணி அணையிலிருந்து தினமும் 8.3 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.

சிறுவாணி அணையின் தென்மேற்கு திசையில், 4 கி.மீ தூரத்தில் உள்ள காஞ்சிரம் புழா அணை, நடப்பாண்டில் 3 முறை நிரம்பியுள்ளது. இந்த அணை சிறுவாணியை விட 1.5 மடங்கு பெரியது. இதே போல், சிறுவாணி அணை யின் தெற்கு திசையில் 13 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மலம்புழா அணை நடப்பாண்டில் இருமடங்கு நிரம்பியது. மலம்புழா அணை சிறுவாணி அணையை விட 2 மடங்கு பெரிதானது.

ஒரே நீர் பிடிப்பு பகுதி அமைந்துள்ள இரு அணை நிரம்பியபோது சிறுவாணி அணை மட்டும் நிரம்பாமல் நீர் மட்டம் குறைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், சிறுவாணி அணை நிரம்பிய பின்னரே காஞ்சிரம் புழா மற்றும் மலம்புழா அணைகள் நிரம்பியுள்ளது. ஆனால், நடப்பாண்டில் சிறுவாணி அணை நீர் மட்டம், 72 சதவீத நீர்தேக்க நிலையில் உள்ளது குறிப்பிடதக்கது.