Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர்த் தொட்டிகளை பாதுகாக்க முன்னாள் ராணுவத்தினர் நியமனம் நகராட்சி நிர்வாகம் முடிவு

Print PDF

தினகரன்             07.12.2010

குடிநீர்த் தொட்டிகளை பாதுகாக்க முன்னாள் ராணுவத்தினர் நியமனம் நகராட்சி நிர்வாகம் முடிவு

பொள்ளாச்சி, டிச 7: பொள்ளாச்சி நகரில் உள்ள குடிநீர்த் தொட்டி வளாகங்களில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவத்தினரை பணியில் அமர்த்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கென 20 நபர்களை பணியமர்த்த அரசு அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் 12 ஆயிரத்து 700 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 270 தெருக்குழாய்களும் உள்ளன. அம்பராம்பாளையம் அருகே ஆழியார் ஆற்றில் இருந்து பெறப்படும் குடிநீர் 8 இடங்களில் உள்ள 11 மேல் நிலை குடிநீர்த் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதில் பாதுகாக்கப்பட வேண்டிய குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் உள்ள வளாகத்திற்கு பாதுகாப்பு பணி க்கு ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் ஆட் கள் பற்றாக்குறை பிரச்னை யால் மேற்படி வளாகங்களில் பல இடங்களில் பாது காப்புக்கு காவலர்கள் நிய மிக்க முடியாமல் நகரா ட்சி நிர்வாகம் தவித்து வந்தது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண முன்னாள் ராணுவத்தினரை பணியில் அமர்த்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர் பாக நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி, ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண், பொறியாளர் மோகன் ஆகி யோர் கூறியதாவது, நகரில் வெங்கடேசா காலனியில் 2, மகாலிங்கபுரத்தில் 2, சுதர்சன் நகர், வி.கே.வி. லே அவுட், கே.ஆர்.ஜி.பி. நகர், கந்தசாமி செட்டியார் பூங்கா மற்றும் சோமசுந்தராபுரம் லே அவுட் ஆகிய இடங்களில் தலா 1 என மொத்தம் 11 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

குடிநீர் சேமித்து விநியோகிக்கப்படும் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி கள் அமைந்துள்ள வளாகங்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய இடங்களாகும். இதற்கென நகராட்சியின் பணியாளர்கள் காவலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். பணியில் இருந்து ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு மேற்படி பகுதிகளில் பல இடங்களில் காவலர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. மேலும் குடிநீரை அனைத்து பகுதிகளுக்கும் சீராக விநியோகிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண மேற்படி இடங்களில் முன் னாள் ராணுவத்தினரை காவலர்களாக நியமிக்க அரசிடம் அனுதி கோரப்பட்டது. இதனை பரிசீலித்து அரசு அனுமதியும் வழங்கியுள்ளது.ஆகவே 12 காவலர்கள், 5 பம்ப் ஆபரேட்டர்கள், 3 வடிதள இயக்குநர்கள் என மொத்தம் முன்னாள் ராணுவத்தினர் 20 நபர்களை நியமிக்க முடிவு செய்து நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ. 7 ஆயிரத்து 191 வீதம் 2010 டிசம்பர் மாதம் முதல் 2011 நவம்பர் வரை ஒரு ஆண்டுக்கு ரூ. 17 லட்சத்து 30 ஆயிரம் சம்பளமாக வழங்கவும் அரசிடம் அனு மதி பெறப்பட்டுள்ளது. சில நாட்களில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் சீராக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.