Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழுப்புரம் நகரில் பிரதான குடிநீர் குழாய் உடைந்தது சரிசெய்யும் பணி தீவிரம்

Print PDF

தினகரன்               08.12.2010

விழுப்புரம் நகரில் பிரதான குடிநீர் குழாய் உடைந்தது சரிசெய்யும் பணி தீவிரம்

விழுப்புரம், டிச. 8: விழுப்புரம் நகராட்சி பயணியர் விடுதியில் 9 லட்சம் கொள்ளளவு உள்ள குடிநீர் தொட்டியுள்ளது. குடிநீர் தொட்டி மூலம் மேலவீதி, வடக்குதெரு, தக்கா தெரு, சேவியர் காலனி, கமலா நகர், கைவல்லியர் தெரு, மாசிலாமணிபேட்டை, வாலாஜா பள்ளிவாசல், விராட்டிக்குப்பம் சாலை, செல்லியம்மன்கோவில் தெரு, முத்துதோப்பு, அகரம்பேட்டை, சித்தேரிக்கரை ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது. நடவடிக்கை எடுக்க நகர்மன்ற தலைவர் ஜனகராஜிடம் மக்கள் வலியுறுத்தினர்.

அவரது உத்தரவின்பேரில் ஆணையர் சிவக்குமார் மேற்பார்வையில் பொறியாளர் பார்த்திபன் தலைமையில் ஓவர்சியர் ஜெயபிரகாஷ்நாராயணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் பள்ளம்தோண்டி உடைப்பு எங்கு ஏற்பட்டுள்ளது என ஆராய்ந்தனர். பயணியர் விடுதியில் இருந்து வரும் பிரதான 8 அங்குலம் குடிநீர் குழாய் உடைந்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து நகராட்சி தரப்பில் கூறுகையில், சென்னை நெடுஞ்சாலையில் சில மாதத்திற்கு முன்பு பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்தது. அப்போது பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி குழாய் பு¬த்தனர். போதியளவில் மண்ணை கொட்டி மீண்டும் மூடவில்லை. வாகனங்கள் சென்றதால் குடிநீர் குழாய் அமுங்கி உடைந்துவிட்டது. 10 மீட்டர் நீளத்துக்கு குடிநீர் குழாய் அகற்றப்பட்டு புதிய குடிநீர் குழாய் பொருத்தப்படும். அதேபோன்று ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு துண்டிக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளும் வழங்கப்படும். ஓரிரு நாட்களில் இப்பணி முடிந்துவிடும், என்றனர்.