Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2வது குடிநீர் திட்டத்திற்கு ரூ8.5 கோடியில் பில்லூர் குழாய் : மாநகராட்சியில் தீர்மானம்

Print PDF

தினகரன்            15.12.2010

2வது குடிநீர் திட்டத்திற்கு ரூ8.5 கோடியில் பில்லூர் குழாய் : மாநகராட்சியில் தீர்மானம்

கோவை, டிச. 15: கோவை மாநகராட்சியில் பில்லூர் 2வது குடிநீர் திட்டத்திற்கு 8.5 கோடி ரூபாய்க்கு குடிநீர் குழாய் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சி மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில், ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியிலிருந்து கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த 12 ஆண்டிற்கு முன், ராமகிருஷ்ணாபுரத்திலிருந்து கிழக்கு மண்டலத் தில் பல்வேறு பகுதிகளுக்கு குழாய் அமைக்கப்பட்டது. இந்த குழாய் பழுதடைந்து விட்டதால் அடிக்கடி உடை ப்பு ஏற்படுகிறது.

பீளமேடு, சிங்காநல்லூர், மசக்காளிபாளையம், சவுரிபாளையம், வரதராஜபுரம், நீலிக்கோணம்பாளையம், சிங்காநல்லூர், எஸ்..எச்.எஸ் காலனி, நேதாஜிபுரம் பகுதியில் தற்போதுள்ள குழாய்களை மாற்றி 8.5 கோடி ரூபாய் செலவில் குழாய் பதிக்க முடிவு எடுக்கப்பட்டது. 5.7 கி.மீ தூரத்திற்கு 900 மி.மீ முதல் 1000 மி.மீ விட்டம் கொண்ட எம்எஸ் மற்றும் டி.ஐ குழாய் அமைக்க கூட்டத்தில் ஒப்பு தல் பெறப்பட்டது.

இயக்கம் மற்றும் பராமரி ப்பு பற்றாக்குறை நிதி தொகை யில் திட்ட பணி நடத்தப்படும். அரசு சார்பில் 4.44 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். மீதமுள்ள தொகையை மாநகராட்சி நிர்வாகம் தனது பங்களிப் பாக செலுத்தும். குழாய் பதித் தால் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 16 வார்டுகளில் குடிநீர் விநியோகம் சீராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சாலை திட்டத்தில், கோவை நகரில் 15 இடத்தில் சிமெண்ட் ரோடு, தார் ரோடு, நடைபாதை, மழை நீர் வடிகால் அமைக்க ஒப் புதல் பெறப்பட்டது. 1.88 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தப்படும்.