Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூரில் ஏரிகளை சுத்தமாக்க ஆணையர் உத்தரவு

Print PDF

தினகரன்          15.12.2010

பெங்களூரில் ஏரிகளை சுத்தமாக்க ஆணையர் உத்தரவு

பெங்களூர், டிச. 15: பெங்களூரில் உள்ள ஏரிகளை புனரமைக்கும் திட்டம் செயல்படுத்தும் படி சம்மந்தப்பட்ட மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் சித்தையா உத்தரவிட்டுள்ளார்.

மாநகரின் ராஜராஜேஷ்வரி நகரில் மாநகராட்சி சார்பில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநகரில் வரலாற்று சிறப்புமிக்க பல ஏரிகள் இன்று காணாமல் போய்விட்டது. ஏரிகள் ஆக்கிரமிப்பை தடுக்காமல் விட்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருக்கும் ஏரிகளை அழிவில் இருந்து காப்பாற்றி கொள்வது அவசியம் என்பதால், மாநரம் முழுவதும் உள்ள ஏரிகளை புனரமைத்து பாதுகாக்கும்படி மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஏரிகளை தூர் வாரிய பின், ஆக்கிரமிப்ப நடக்காமல் தவிர்க்கும் வகையில் ஏரியை சுற்றி கம்பிவேலி அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஏரியில் கழிவுநீர் கலக்காமல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராஜராஜேஸ்வரி மண்டலத்தில் 64 புதிய பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. இதில் 5 பூங்காவில் மழைநீர் சேமிப்பு வசதி மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்படும் என்றார்.