Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குழாய் உடைப்பு சீரமைப்பு தீவிரம் சுசீந்திரம், கன்னியாகுமரி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நாளை சீரடையும்

Print PDF

தினகரன்        15.12.2010

குழாய் உடைப்பு சீரமைப்பு தீவிரம் சுசீந்திரம், கன்னியாகுமரி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நாளை சீரடையும்

நாகர்கோவில், டிச.15: திருப்பதிசாரம் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சுசீந்திரம், கன்னியாகுமரி பகுதிகளில் நாளை முதல் குடிநீர் விநியோகம் சீரடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பழையாற்றில் வீரநாராயணமங்கலத்தில் இருந்து திருப்பதிசாரம் பிரிவு கால்வாய் பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் ஊருக்கு வடக்கு பகுதியில் 3 உடைப்புகள் என்று மொத்தம் 4 இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் ரூ4 லட்சம் மதிப்பிலான குடிநீர் குழாய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பழையாற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு தேரூரில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு நடந்து வரும் குடிநீர் விநியோக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பதிசாரம், தேரேகால்புதூர், தேரூர், சுசீந்திரம், கன்னியாகுமரி மற்றும் வழியோர கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்தநிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திருப்பதிசாரம் பகுதியில் குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் சீர் செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. ரூ14 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் பண்ட்அமைக்கும் பணிகள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கும் பளப்பட உள்ளன.குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணிகளை குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறி யாளர் எம்.சுப்பிரமணியன், நிர்வாக பொறியாளர் பெருமாள், உதவிபொறியா ளர் ராஜகோபால் உட்பட அதிகாரிகள் பார்வையிட்டனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உடைப்பு சீரமைப்பு பணிகள் நாளை (இன்று) நிறைவு பெற்றுவிடும், நாளை மறுநாள் (நாளை) முதல் பழையாற்றில் இருந்து குடிநீர் விநியோகம் துவங்கிவிடும். உடைப்பு சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறதுஎன்றார்.

குமரியில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் திருப்பதிசாரம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அங்கு குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Last Updated on Wednesday, 15 December 2010 06:29