Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறுவாணியில் 90 நாளுக்கே இருப்பு நகரில் குடிநீர் தட்டுப்பாடு தடுக்க விரைவில் அதிகாரிகள் ஆலோசனை

Print PDF
தினகரன்        01.02.2011

சிறுவாணியில் 90 நாளுக்கே இருப்பு நகரில் குடிநீர் தட்டுப்பாடு தடுக்க விரைவில் அதிகாரிகள் ஆலோசனை

கோவை, பிப். 1:சிறுவாணி அணையிலிருந்து தினமும் 7.2 கோடி லிட்டர், பில்லூர் அணையில் இருந்து 6.5 கோடி லிட்டர் குடிநீர், கோவைக்கு வினியோகிக்கப்படுகிறது. ஒருவருக்கு தின மும் 135 லிட்டர் என்ற அளவு குடிநீர் வினியோகிக்கவேண்டும். 100 லிட்டர் குடிநீர் கிடைப்பதே அரிதாகி விட்டது. 10 முதல் 15 சத வீதம் வரை வினியோக இழப்பு ஏற்படுகிறது. ரோடு, வடிகால் உள்ளிட்ட பணி களால் குடிநீர் குழாய் சேதம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

சிறுவாணி அணை நீர் மட்டம் 15 மீட்டர். 9 மீட்டர் தண்ணீர் உள்ளது. 90 நாளுக்கு மட்டுமே குடிநீர் உள்ளது. 2 ஆண்டுகளாக ஜூலையில்தான் பருவ மழை துவங்குகிறது. சிறு வாணி நீர் மட்டம் பாதா ளத்தை எட்டினால் 3 மாதம் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என குடிநீர் வாரியத்தினர் அச்சமடைந்துள்ளனர். குடி நீர் அளவை குறைத்து, வினி யோக நடைமுறையை மாற்றி னால் பருவ மழை துவங்கும் காலம் வரை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

‘ஒரு நாள் விட்டு ஒரு நாள்’ என்ற நடைமுறையை 3 நாள் அல்லது 4 நாளுக்கு ஒரு முறை குடிநீர் என நீடிக்க யோசனை நடக்கிறது. இதை செயல்படுத்தினால், மே மாத இறுதி வரை சிறுவாணி குடிநீர் வினியோகத்தை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் உள்ளிட்ட கிழக்கு, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. குடிநீர் வினியோக மாற்றம் தொடர்பாக மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட அளவு சப்ளை இல்லை

சிறுவாணி அணையிலிருந்து தினமும் 10 கோடி லிட்டர் (100 மில்லியன் லிட்டர்) குடிநீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுத்திகரித்த பின்னர் 9.8 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும். இதில் மாநகராட்சிக்கு 8.3 கோடி லிட்டர், வழியோர நகராட்சி, கிராமங்களுக்கு 1.5 கோடி லிட்டர் குடிநீர் வழங்கவேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக இந்த உத்தரவு மீறப்படுகிறது.

கோவை மாநகராட்சிக்கு அணை நிரம்பி வழியும் காலம் தவிர இதர காலங்களில் தினமும் 7.3 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. வெயில் காலங்களில் இந்த அளவு தினமும் 6 கோடி லிட்டர் என குறைக்கப்படுவது உண்டு. 75 கோடி ரூபாய் குடிநீர் கட்டண கடன் காரணமாக மாநகராட்சியும் உரிய அளவு குடிநீரை கேட்டு வாங்கவில்லை.