Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் கட்டணம் செலுத்த தானியங்கி இயந்திரம் அறிமுகம்

Print PDF

தினமணி       30.11.2011

குடிநீர் கட்டணம் செலுத்த தானியங்கி இயந்திரம் அறிமுகம்


சென்னை அண்ணாநகர், அடையாறில் குடிநீர் வாரிய கட்டணம் செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி இயந்திரம்.
சென்னை, நவ.29: குடிநீர் கட்டணம் செலுத்த தானியங்கி இயந்திரத்தை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் திங்கள் கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

 இது குறித்து நிர்வாக இயக்குநர் கோபால் கூறியது:குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி, குடிநீர் கட்டணம், நிலுவைத் தொகை ஆகியவற்றை

 நுகர்வோர் எளிதாகச் செலுத்த வசதியாக சென்னை அண்ணாநகர் 2-வது நிழற்சாலையில் உள்ள 5-வது பகுதி அலுவலகத்திலும், அடையாறு இந்திராநகர் முதல் பிரதான சாலையில் உள்ள 10-வது பகுதி அலுவலகத்திலும் இரண்டு தானியங்கி இயந்திரங்கள் முன்னோடியாக நிறுவப்பட்டுள்ளன.

 சென்னை நகரில் எந்தப் பகுதியில் குடிநீர் இணைப்பு இருந்தாலும் தானியங்கி இயந்திரத்தில் கட்டணம் செலுத்தலாம். கட்டணம் பற்றிய விவரங்களை பகுதி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம். இந்த இயந்திரம் 24 மணி நேரமும் இயங்கும். கட்டணத்தை பணம் அல்லது காசோலையாகச் செலுத்தலாம். ரசீதும் பெற்றுக்கொள்ளலாம். கட்டணத் தொகை செலுத்திய விவரம் சென்னை குடிநீர் வாரியத்தின் வலை தளம் மற்றும் வாரியத்தின் பிராதான கணினியிலும் பதிவு செய்யப்படும். இயந்திரத்தின் திரையில் செயல் முறை விளக்கம் தெரியும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
Last Updated on Wednesday, 30 November 2011 10:18