Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: சென்னைக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் விரைவில் கிடைக்கும்- அமைச்சர் தகவல்

Print PDF

மாலை மலர்              16.08.2012

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: சென்னைக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் விரைவில் கிடைக்கும்- அமைச்சர் தகவல்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: சென்னைக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் விரைவில் கிடைக்கும்- அமைச்சர் தகவல்

சென்னை, ஆக. 16-நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் சென்னைக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் விரைவில் கிடைக்கும் என்று அமைச்சர் கே.பி. முனுசாமி கூறினார்.
 
காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அருகில் நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கட்டுமானப் பணிகளை வி.ஏ. டெக் வாபாக் இந்தியா லிமிடெட் நிறுவனமும், குழாய் பதித்தல், கீழ்நிலைத் தொட்டி அமைத்தல் ஆகிய பணிகளை லார்சன் அண்டு டியூப்ரோ லிமிடெட் நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன.
 
இந்நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி அதிகாரிகளுடன் நெம்மேலியில் இன்று காலை விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
 
பின்னர் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியதாவது:-
 
முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க பொது மக்களுக்கு தங்கு தடையின்றி தரமான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்ட கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து விரைவில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை நகர் மக்களுக்கு விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது கூடுதல் அரத் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஷீலா பாலகிருஷ்ணன், சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் அபூர்வ வர்மா, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் தண்டரை கே. மனோகரன் சென்னை குடிநீர் வாரிய பொறியியல் இயக்குனர் வி. பால்ராஜ், தலைமை? பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.